December 25, 2016
களத்தில் இறங்க தயாராக இருக்கும் வருமான வரித்துறை: தமிழகத்தில் முக்கியப் புள்ளிகள் அதிர்ச்சி
சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள், தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் மற்றும் அவரது உறவினர்கள் வீடு மற்றும் அலுவலங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராம மோகன ராவை விசாரணைக்கு அழைத்த நிலையில் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். சனிக்கிழமை 60க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையும் வருமான வரி புலனாய்வு பிரிவு இயக்குனர் பவன் குமார் தலைமையில் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள், ராம மோகன ராவ் மற்றும் அவரது உறவினர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் யாருடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என்ற பட்டியலை தயாரித்துள்ளனர். சேகர் ரெட்டி வீட்டில் நடந்த சோதனையில் அவருக்கு நெருக்கமானவர் ராமமோகன ராவ் என தெரிய வந்தது. இதையடுத்துதான் ராமமோகன ராவ் வீடு, அவரது மகன் வீடு, அலுவலகத்தில் சோதனை நடந்தது. இதேபோல் சேகர் ரெட்டியுடன் உயர் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் தொடர்பில் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. ராம மோகன ராவுடனும் உயர் அதிகாரிகள், அரசியல் வாதிகள் மிக நெருக்கத்துடன் இருந்தது தெரிய வந்தது.
உயர் அதிகாரிகள் என்பதால் அவர்கள் தப்பிவிடக் கூடாது என்பதற்காக வருமான வரித்துறை தலைமையகம் மூலம் மத்திய அரசிடம் முன்னெச்சரிக்கையாக தகவலை சொல்லி, சோதனைக்கான அனுமதியையும் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. திங்கள்கிழமையில் இருந்து இந்த சோதனை தொடரும் என்று கூறப்படுகிறது. இதற்காக வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
களத்தில் இறங்க தயாராக இருக்கும் வருமான வரித்துறை: தமிழகத்தில் முக்கியப் புள்ளிகள் அதிர்ச்சி
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 25, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 25, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.