Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 16, 2016

பூமியில் ஏற்படும் இயற்கை சீற்றங்கள்..! ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல்..!



உலக நாடுகள் எல்லாம் உற்று நோக்கும் தற்போதைய முக்கிய பிரச்சனை பூமி வெப்பமடைந்து வருவது தான்.

இதற்கு முக்கிய காரணமாக பருவநிலை மாற்றம் என்று சொல்லப்படுகிறது. பருவநிலை மாற காரணம் என்ன? மனிதனிர்களின் விஞ்ஞான வளர்ச்சியாலும், பொறுப்பற்ற செயலாலும் தான் இந்த பருவநிலை மாற்றம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

அமெரிக்க வானிலை ஆராய்ச்சி மையம் ஒன்று இந்தியா, அமெரிக்கா, கனடா, மற்றும் ஆப்பிரக்க கண்டங்களை சேர்ந்த 18 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

பூமியில் நிலப்பரப்பு, கடல்பரப்பு, வளிமண்டல ரசாயன மாறுதல், சுற்றுச்சூழல், உயிரியல் என எல்லாவற்றையும் மனிதன் மாறுதலுக்கு உட்படுத்திவிட்டான்.

பூமியின் அரணாக விளங்கும் மலைகளை உடைத்தும், மரங்களை அழித்தும், நதிகளின் பாதைகளை திருப்பியும், நகரங்களை உருவாக்கி கொண்டிருக்கிறோம்.

உலகின் பாதிக்கு மேற்பட்ட மக்கள் நகர்ப்பகுதிகளில் வசிக்கிறார்கள். 75 சதவீத நிலப்பரப்பு மனிதனால் திருத்தி அமைக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக தான் 2015ம் ஆண்டில் ஏற்பட்ட வறட்சி, அதிகமான வெள்ளப் பெருக்கு, காடுகள் தீக்கிரையாவது, பனிப்பாறைகள் உருகுவது போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

2015ல் சென்னையில் ஏற்பட்ட கடுமையான மழை, வெள்ளப்பெருக்கு, நைஜீரியாவில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி போன்ற நிழ்வுகள் ஏற்பட காரணம் என்று கூறப்படுகிறது.

புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் வகையில் உலகநாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

உலகம் அழிவை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் வேளையில் உலக நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.