Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 16, 2016

ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட பிரச்சனையே கருணாநிதிக்கும்: வெளியான ஆதாரம்!



மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனையே தற்போது திமுக தலைவர் கருணாநிதிக்கு ஏற்பட்டுள்ளது என மருத்துவமனை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

நுரையீரல் தொற்று, காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவதிப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த அக்டோபர் 22ம் திகதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.

நுரையீரல் தொற்று காரணமாக அவருக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்ட செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்,தொடர் சிகிச்சை பெற்ற வந்த அவர் டிசம்பவர் 5ம் திகதி அவர் காலமானார்.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி தற்போது மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கருணாநிதிக்கு தொண்டை மற்றும் நுரையீரல் தொற்றால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக அவர் சிகிச்சைக்காக மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் கருணாநிதியும் ஜெயலலிதாவை போல் நுரையீரல் தொற்றால் அவதிப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.