Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 16, 2016

ஜெயலலிதாவுக்கு தரப்பட்ட அதே ட்ரக்கியோஸ்டோமி சிகிச்சையில் கருணாநிதி!



தொண்டையின் நடு பகுதியில் பெரிய துளையிட்டு, அதற்குள் டியூப்பை நுழைத்து, டியூப் மூலம் காற்று குழாயை இணைத்து நுரையீரலுக்கு நேரடியாக ஆக்சிஜனை கொண்டு சேர்க்கும் சிகிச்சை நடைமுறை ட்ரக்கியோஸ்டோமி என்று அழைக்கப்படுகிறது.



தொண்டையிலுள்ள மூச்சு குழல் சேதமடைந்திருந்தால் இதுபோன்ற செயற்கை முறையிலான சுவாசம் அவசியப்படுகிறது. நோய் தொற்று காரணமாக தொண்டையிலிருந்து நுரையீரல் செல்லும் குழாய் பாதிக்கப்பட்டிருக்கும்போதும், ட்ரக்கியோஸ்டோமி சிகிச்சை கொடுக்கப்படுகிறது.



தொண்டையில் ஓட்டை போட்டு டியூபை பெருத்திய பிறகு அந்த பகுதியை சுற்றிலும் தையல் போடப்படும். தொண்டையில் பொருத்தப்படும் டியூபை தேவைப்படும்போது எடுத்துவிடுவார்கள். தேவைப்படும்போது பொருத்திக்கொள்வார்கள். ஆனால் தொண்டையில் பொருத்தப்பட்ட இணைப்பு குழாய் அப்படியே இருக்கும்.



கையில் ட்ரிப்ஸ் போடும்போது, அவ்வப்போது டியூப்பை எடுத்துவிட்டாலும், கையில் பொருத்தப்பட்ட இணைப்பு குழாய் அப்படியே விட்டிருப்பார்கள். அதைப்போலவே ட்ரக்கியோஸ்டோமி குழாயும் கழுத்தில் அப்படியே இருக்கும் என கூறப்படுகிறது. முழுமையாக நோயாளி குணமடையும்போதுதான், அந்த இணைப்பு குழாய் எடுக்கப்படும்.



மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் நுரையீரல் நோய் தொற்று காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, ட்ரக்கியோஸ்டோமி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் உதவியோடு அவர் பேசினார் என அப்பல்லோ ஒருமுறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.