Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 8, 2016

ஆத்தா கோபம் - கொஞ்சம் பழையது.


மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் சசிக்கும்  உள்ள  உறவில் விரிசல் ஏற்பட்டபொழுது  பல பத்திரிக்கையில்  வந்த செய்திகளில் ஒரு பத்திரிக்கையில் வந்த செய்தி.

முப்பது வருட நட்பு முறிந்ததா இல்லை, வெறும் நாடகமா புகைந்துகொண்டிருப்பது பத்திக்கிச்சா, இல்லை பத்திகிட்டது புகையுதா? ஒரு எழவும் புரியவில்லை.

உ.பி.சவும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் அம்மா கூண்டோடு தூக்கிவிட்டார்கள். இதற்கு காரணம் எல்லா அரசியல் விவகாரங்களிலும் மன்னார்குடி குடும்ப ஆதிக்கம்தான் காரணமாம். ஆத்தாவுக்கு எல்லாமே லேட்டாதான் புரியும் போல இருக்கிறது. பெங்களுரு நீதிமன்றத்தில் அம்மாவுக்கு எதிராக தீர்ப்பு உறுதி எனும் பட்சத்தில் கட்சியையும் ஆட்சியையும் எப்படி மன்னார்குடி கண்ட்ரோலில் கொண்டுவருவது என்பதை ரூம் போட்டு யோசிச்சதை உளவுத்துறை அம்மாவிடம் புட்டு புட்டு வச்சிட்டாங்களாம். அதனால் தான் இந்த ருத்திர(உக்கிர)தாண்டவம் என்பது கருத்து.

உளவுத்துறை டி.ஐ.ஜி. ராஜேந்திரனை திட்டமிட்டு அகற்றி பொன்மானிக்கவேலை கொண்டுவந்ததே அம்மையாரிடமிருந்து முக்கிய தகவல்களை வடிகட்டதானாம். ஆதலால் அம்மாவுக்கு எந்த முக்கிய விஷயங்களும் போய் சேரவில்லையாம். மேலும் கடந்த ஆறு மாதங்களாகவே அம்மாவுக்கு தெரியாமலே நிறைய அரசாங்க வேலைகளும், முடிவுகளும் எடுக்கப் பட்டதாக தெரிகிறது.

இதை விட இன்னொரு முக்கிய விஷயம் உள்ளது. அது வரைமுறையே இல்லாமல் தாறுமாறாக பணம் பார்க்க ஆரம்பித்து விட்டார் சசிகலா என்பதுதான். சாதாரண பியூன் நியமனம் முதல் அரசுத் துறை ஊழியர்களின் பதவி உயர்வு, இடமாறுதல் என எல்லாவற்றிற்கும் மிகப் பெரிய அளவில் காசு வாங்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதே அது.

டெண்டர், நியமனம், இடமாறுதல், பதவி உயர்வு என எதுவாக இருந்தாலும் ஒரு ரேட்டை நியமித்து சசிகலா தரப்பு கறாராக வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதெல்லாம் சேர்ந்துதான் சசிகலாவை கட்சியை விட்டு தூக்கும் முடிவுக்கு ஜெயலலிதாவைக் கொண்டு சென்றதாக பேசப்படுகிறது.

இதெல்லாம் உண்மையா? அல்லது கூடங்குளம், முல்லைபெரியாறு என்ற பிரச்சினைகளிருந்து மக்களை திசை திருப்பவா? என்ற ஐயமும் நம் மனதில் தோன்றுகிறது.

மேலும் சில கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை.
1.       உ.பி.ச போயஸ் கார்டனை விட்டு விரட்டப் பாடுவாரா?
2.       மிடாஸ் சரக்கு டாஸ்மாக்குக்கு இன்னும் சப்ளை ஆகுமா?
3.       ஜெயா டிவி பொறுப்பாளராக இருக்கும் சசி உறவினர் வெளியேற்றப்படுவாரா?
4.       உ.பி.ச கூட்டம் அடித்த கொள்ளை கைப்பற்றப்படுமா?

பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.  இப்படித்தான்  இருந்தது சசி  ஜெய உறவில் ஏற்பட்ட விரிசல்  பின்பு எப்படி இரண்டுபேரும்  சேர்ந்தார்கள் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது .

தமிழ்நாட்டில் உள்ள  பத்திரிக்கைகளில் தன்னை  புலனாயு பத்திரிக்கைகள் என்று மார்தட்டிக்கொள்ளும் பத்திரிக்கைகளும் ஏதும் வாய் தொறக்காமல் இருப்பது எனோ?

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.