Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 20, 2016

அப்போலோ ரெட்டி குசும்பு…! கலைஞருக்கும் வலை..!! அச்சத்தில் திமுக…! அம்மாடியோவ்…!?



திமுக தலைவா் கருணாநிதி  கடந்த 1ம் தேதி உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
உடல் நலம் தேறிய நிலையில் வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் கடந்த 15ம் தேதி மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்பட்டது.
மீண்டும் காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சோ்க்கப்பட்டார்.
சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியை ராகுல் காந்தி,ஜி.கே.வாசன்,திருமாவளவன்,தா,பாண்டியன்,முத்தரசன்,ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்,திருநாவுக்கரசர்   நடிகா்கள் பிரபு  உள்ளிட்ட  பிரமுகா்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனா்.
இந்த நிலையில் அவா் உடல் நலம் சிறப்பாக உள்ளது. டிவி பார்க்கிறார், பேப்பா் படிக்கிறார், இன்னும் 2 தினங்களில் வீட்டுக்கு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் திமுக தலைவா் கருணாநிதியை மதிமுக பொது செயலாளா் வைகேவும் சந்தித்து நலம் விசாரிக்க சென்றார். அவரை திமுகவினா் அசிங்கப்படுத்தி விரட்டி அடித்தனா்.
இந்த நிலையில் அப்போலோ மருத்துவமனை தலைவா் பிரதாப் ரெட்டி திமுக தலைவரை சந்திக்க சென்றார். அவர் கருணாநிதி உடல் நலம் விசாரிக்க வந்தாரா அல்லது காவேரி மருத்துவமனையில் இருந்து அழைப்புவிடுத்து வந்தாரா என்கிற விபரம் தெரியவிவ்லை.
 ரெட்டி காரில் மருத்துவமனையின் உள்ளேயே சென்றதால், சென்றது யார் என்று தொண்டா்களுக்கு தெரியவில்லையாம்.
அது ரெட்டிதான் என்று முன்பே தெரிந்திருந்தால் உள்ளேயே அனுமதித்திருக்க மாட்டோம் என்றனா் தொண்டா்கள். நல்ல மருத்துவமனை எங்கள் மருத்துவமனை என்று கூறி கலைஞருக்கும் வலை விரிக்க வந்தாரா என்றும் ஆதங்கப்பட்டனா்.
ரெட்டி வந்து சென்ற செய்தி திமுகவினா் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.