Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 15, 2016

கற்பை இழப்பதை விட தற்கொலை செய்வதே மேல்! பெண்ணின் உருக்கமான கடிதம்!



சிரியாவின் ஆலோபா நகரை கைப்பற்ற போர் உச்சமாக நடக்கும் சூழலில் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராக இருந்த பெண் தன் கற்பை காப்பாற்றி கொள்ள கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார்.
அந்த கடிதத்தில், அலோப்பாவில் ராணுவ வீரர்கள் என்ற போர்வையில் இருக்கும் மனித மிருகங்களிடம் இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் சிக்கி சீரழிய நேரிடலாம். என்னை காப்பாற்ற எந்த ஆண்மகனோ அல்லது ஆயுதமோ தற்போது இல்லை.
நான் யாரையும் கெஞ்ச போவதில்லை. நான் தற்கொலை செய்து என் உயிரை மாய்த்து கொள்ள போகிறேன்.
நான் இங்குள்ளவர்களால் பாலியல் ரீதியாக சீரழிக்கப்பட்டு என் தந்தை முன்னர் போக விரும்ப வில்லை அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன்.
காரணம் இல்லாமல் இந்த முடிவை நான் எடுக்கவில்லை. இங்கு தற்போது இருக்கும் பேராபத்தை நினைவில் கொண்டே இதை செய்ய போகிறேன்.
இங்கு இருக்கும் மனித மிருகங்கள் பாலியல் ரீதியாக ஒன்று சேர்ந்து என்னை துன்புறுத்துவார்கள். காரணம் நான் யாரோ ஒரு பெண் தானே. அவர்களின் தாயோ, சகோதரியோ, மனைவியோ இல்லையே!
இதை யாராவது படிக்கும் முன்னர் என் உயிர் பிரிந்திருக்கும். இவ்வாறு அந்த பெண் அந்த கடிதத்தில் உருக்கமாக எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.