
பொதுமக்கள் பணம் எடுக்க சிரமப்படுவதாக புகார்கள் வரும் நிலையில், சோதனைகளின் போது கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்படுவது எப்படி? என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், டிசம்பர் 31-க்கு பிறகு மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பழைய ரூபாய் நோட்டுகளை அரசு மருத்துவமனைகளில் பெறுவதற்கே தயக்கமா? என கேள்வி எழுப்பினர்.
நவம்பர் 9 முதல் 14-ம் தேதி வரை கூட்டுறவு வங்கிகளில் மக்களிடம் இருந்து பெறப்பட்ட 8000 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி தெரிவித்தார்.
மேலும் 5 லட்சம் கோடி மதிப்பிலான புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளும், 2.5 லட்சம் கோடி மதிப்பிலான சிறிய மதிப்புடைய ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருப்பதாகவும் பண தட்டுப்பாடு இல்லை என்றும் முகுல் ரோத்தகி கூறினார்.
அப்போது, பொதுமக்கள் பணம் இல்லாமல் சிரமப்படுவதாக புகார்கள் வரும் நிலையில் சோதனைகளின் போது கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்படுவது எப்படி என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முகுல் ரோத்தகி, தனியார் வங்கிகளின் மேலாளர்களே அத்தகைய முறைகேடுகளில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.