இந்திய அரசியலில் எப்போதுமே குடும்ப அரசியலுக்கென்று ஒரு இடம் உண்டு.
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தனக்கு பிறகு தான் வகிக்கும் பதவியில் தனது வாரிசுகள் தான் வரவேண்டும் என்று பல சூழ்ச்சிகளையும், வஞ்சகங்களையும் செய்து பகைமையை வளர்த்து கொள்கின்றனர்.
தமிழகத்தில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவின் அடுத்த வாரிசு நான் என்று சசிகலா ஒருபக்கமும், நான் அடுத்த வாரிசு என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் கூறி வருகின்றனர்.
ஆனால் ஜெயலலிதாவோ தனக்கு பிறகு யாரையும் வாரிசாக கூறவும் இல்லை, எதிலும் குறிப்பிடவும் இல்லை.
அப்படியே தோழி சசிகலாவை தனக்கு பிறகு வாரிசாக நியமிக்க நினைத்திருந்தால் அவர் இருக்கும்போதே கட்சியின் சார்பாக நடக்கும் ஏதாவது ஒரு கூட்டத்திலாவது பேசவிட்டு அழகு பார்த்திருக்கலாமே.
இவ்வுளவு நாள் கூடவே இருக்கும் தோழிக்கு ஒரு எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. ஏன் ஒரு கவுன்சிலர் பதவியாவது கொடுத்திருக்கலாமே? ஏன் ஜெயலலிதா அதை செய்யவில்லை.
தனது உறவினர்களோ அல்லது தன்னை சார்ந்தவர்களோ கட்சியில் அடிப்படை உறுப்பினராக கூட சேர்க்கவில்லை. தனக்கு பிறகு கட்சியை யாரும் கைப்பற்ற முடியாத அளவு சட்டசிக்கலையும் உருவாக்கி வைக்க வேண்டிய அவசியம் ஏன்?
ஜெயலலிதா தனது அரசியல் எதிரியான கருணாநிதியை அவரது குடும்ப அரசியல் பற்ற விமர்சித்து தான் வீழ்த்தினார். அதனால் தான் என்னவோ தன்னை சார்ந்தவர் யாரும் அதிமுகவை வழிநடத்த அவர் விரும்பவில்லையோ?
ஜெயலலிதா ஊழல் வழக்கில் ஜெயிலுக்கு சென்றபோது கூட பன்னீர்செல்வத்தை முதல்வராக நியமித்தாரே தவிர தன்னை சார்ந்தவர்களையோ, உறவினர்களையோ அல்ல.
ஜெயலலிதாவின் எண்ணங்களையும், செயல்களையும் அவரது மரணத்தோடு மறந்து விட்டு கட்சி தலைமைக்காகவும், பதவிக்காவும் இவர்கள் போடும் இந்த வாரிசு சண்டையால் தொண்டர்களிடையே மனவருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதான் உண்மை.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.