
டெல்லி: பிரதமர் மோடிக்கு எதிராக தம்மிடம் உள்ள ஆதாரத்தை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஏன் வெளியிடவில்லை என்று டெல்லி முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, மோடி தொடர்பான ஊழல் குறித்த ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அதை நாடாளுமன்றத்தில் பேச விரும்புகிறேன். ஆனால் என்னைப் பேச விடாமல் தடுக்கிறார்கள் என குற்றம்சாட்டியிருந்தார்.
இது குறித்து ட்விட்டரில் கேஜ்ரிவால் பதிவிட்டுள்ளதாவது:
ராகுலிடம் உண்மையிலேயே ஆதாரம் இருந்தால் ஏன் நாடாளுமன்றத்துக்கு வெளியில் வெளியிடவில்லை?
ஹெலிகாப்டர் ஊழலில் காங்கிரஸுக்கு தொடர்பு என்கிறது பாஜக; ஆனால் சகாரா, பிர்லா நிறுவன ஊழல்களில் பா.ஜ.க.வுக்கு தொடர்பு என்கிறது காங்கிரஸ்.ஆனால் 2 கட்சிகளுமே ஆதாரங்களை வெளிப்படுத்துவதில்லை.
இவ்வாறு கேஜ்ரிவால் பதிவிட்டுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.