தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எல்லாம் தற்போது எல்லை மீறி போகின்றது. TRP-க்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்ற நிலை உருவாகிவிட்டது.
அப்படித்தான் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வரும் நிகழ்ச்சி ஒன்று பெரும் சர்ச்சையை சந்தித்துள்ளது, அவரும் அதற்காக பல இடங்களில் விளக்கம் கொடுத்து வருகின்றார்.
இந்நிலையில் நேற்று ரங்கராஜ் பாண்டே நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட லட்சுமியிடம் அடுக்கடுக்கான கேள்விகளால் அசர வைத்தார்.
இதில் குறிப்பாக ’அடுத்தவர்கள் பொண்டாட்டி வேறு ஒருவருடன் ஓடிப்போவது எல்லாம் ஒரு பிரச்சனை என ஏன் அதை சபைக்கு கொண்டு வருகிறீர்கள்.
நீங்கள் நடத்தும் நிகழ்ச்சியால் பலர் திருந்தி இருக்கிறார்கள் என்றால், ஏன் ஸ்வாதி கொலை நடந்தது?’ என பல கேள்விகளால் மடக்கினார்.
மேலும் லட்சுமி நானும் என்னுடைய பிரச்சனையை சமூக வலைத்தளங்களில் கூறுவேன், ‘என் குடும்பத்தினர் நடத்தும் வாட்ஸ் அப் குரூப்பில் என்னை சேர்க்கவில்லை.
அதை எதிர்த்து டுவிட் செய்தேன்’ என சொல்ல பாண்டே மட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியை பார்த்த பல மக்கள் சிரித்திருப்பார்கள்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.