December 25, 2016
சசிகலாவிடம் அதிரடி சோதனை?
தமிழகத்தில் வருமான வரித்துறை அதிரடியாக நடத்தி வரும் சோதனையில் பல முக்கிய புள்ளிகள் சிக்கியுள்ள நிலையில் அடுத்தது சிக்கப்போவது சசிகலா என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவர்களை குறிவைத்து வருமான வரித்துறை அதிரடி சோதனைகள் நடத்தி வருகின்றன. அவர்களிடம் இருந்து எதிர்ப்பார்த்ததைவிட அதிகமான ரகசியங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் சசிகலா வட்டாரத்திலும் அதிரடியாக சோதனை நடத்த திட்டம் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
இதற்கு சசிகலா தரப்பு தடையாக இருந்தால் அவரை கைது செய்யவும் தயங்காதாம் மேலிடம். இவ்வாறு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதனால் சசிகலா தரப்பினர் கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
சசிகலாவிடம் அதிரடி சோதனை?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 25, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 25, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.