
அமெரிக்காவின் கலிபோர்னியா, குப்பெர்டினோ நகரத்தில் மேயராக இந்திய பெண் சவீதா வைத்தியநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
குபெர்ட்டினோ நகரத்தில் கம்ப்யூட்டர் தயாரிப்பில் மிகவும் பிரபலமான ‘ஆப்பிள்’ நிறுவனம் அமைந்துள்ளது.
இந்த நகரில் வாழும் அனைவரும் கல்வியறிவில் சிறந்து விளங்கி வருவதாக ‘போர்ப்ஸ்’ பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
இந்நகரில் சுமார் 20 ஆண்டுகளாக வசித்து வருபவர் சவீதா வைத்தியநாதன். இந்தியப் பெண்ணான இவர், எம்.பி.ஏ. பட்டதாரி. ஆரம்பத்தில் கணித ஆசிரியையாக இங்குள்ள பள்ளியில் பணியாற்றினார்.
பின்னர், தனியார் வங்கியில் பணியாற்றியதுடன் பல்வேறு சமூகச்சேவைகளிலும் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், குபெர்ட்டினோ நகர மேயர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் அங்குள்ள மக்களின் அமோக ஆதரவை பெற்ற சவீதா, சமீபத்தில் மேயராக பதவியேற்று கொண்டார்.
அவரது பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சவீதாவின் தாயார் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார்.
இந்நகரின் மேயராக பதவியேற்ற முதல் இந்தியப் பெண் என்ற வகையில் அமெரிக்காவின் பல பகுதிகளில் வாழும் இந்தியர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.