December 25, 2016
வெளிநாடுகளில் பல ஆயிரம் கோடி முதலீடு செய்த தமிழக அரசியல் புள்ளிகள் அதிகாரிகள் யார், யார்? கொல்கத்தா தொழிலதிபர் வாக்குமூலம்
வெளிநாடுகளில் பல ஆயிரம் கோடி முதலீடு செய்த தமிழக அரசியல் புள்ளிகள், ஐபிஎஸ் அதிகாரிகள் யார் என்பது குறித்து கொல்கத்தா தொழிலதிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்தனர். தமிழகத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், ஒப்பந்ததாரருமான சேகர் ரெட்டிக்கு ₹25 கோடி பழைய நோட்டுகளை பெற்றுக்கொண்டு புதிய ₹2 ஆயிரம் நோட்டுகளாக மாற்றி கொடுத்து முறைகேடாக உதவிய கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபர் பரஸ்மால் லோதா மீது அமலாக்க பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த லோதா கடந்த 21ம் தேதி மும்பை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பி ஓட முயன்றார். அப்போது, அமலாக்கத்துறையினர் லோதாவை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடம் சேகர் ரெட்டிக்கும் அவருக்குமான தொடர்பு குறித்து அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் வகையில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து, அமலாக்கத்துறையினரிடம் அவர் கூறியதாவது:
எனக்கு, கரூரை சேர்ந்த அன்புநாதன் நண்பராக அறிமுகமானார். அவர் மூலம் 2 முன்னாள் அமைச்சர்கள், தமிழக அரசின் முக்கிய பதவியில் உள்ள விஐபி பழக்கமானார். அவர்கள் மூலமாக, ஏராளமான தொடர்பு தமிழகத்தில் கிடைத்தது. அந்த தொடர்பு மூலமாக 3 விஐபிக்களின் பல ஆயிரம் ேகாடி பணம் அன்பு நாதன் மூலம் எனக்கு வரும். அதை நான் வெளிநாட்டில் முதலீடு செய்துள்ளேன். மேலும், அவர்கள் கொடுத்த பணத்தை கொண்டு துபாயில் வர்த்தக வளாகம் கட்டினோம். அன்புநாதன் மூலமாக சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் பல ஆயிரம் கோடி பணத்தை முதலீடு செய்துள்ளேன்.
முன்னாள் அமைச்சர் கொடுத்த பணத்தை கொண்டு தாய்லாந்தில் தனித்தீவு ஒன்றை வாங்கியுள்ளோம். தாய்லாந்தில் உள்ள காசிக்கோன் வங்கியில் பல நூறு கோடி பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சேகர் ரெட்டியின் பணத்தையும் முதலீடு செய்தேன். இதில், எங்களுக்கு சில ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் உடந்தையாக இருந்தனர். அவர்களுடைய பணமும் என் மூலமாக முதலீடு செய்யப்பட்டுள்ளது.
வடமாநிலத்தை சேர்ந்தவரும், தமிழகத்தில் முக்கிய பதவியில் பணிபுரிந்து வரும் ஏடிஜிபியும் எனக்கு உடந்தையாக இருந்தார். அவர் எங்களுக்கு பல்வேறு வகையில் உதவி செய்தார். அவரும் எங்களுடன் பல கோடி பணத்தை முதலீடு செய்துள்ளார். அவர் எங்களுடன் துபாய் வந்துள்ளார். அவருக்கான சகல வசதிகளையும் நாங்கள் செய்து கொடுத்து, அவரை திருப்திபடுத்திதான் அனுப்பி வைப்போம். அவர் எங்களுக்கு தூதரகம் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் பலரை அறிமுகப்படுத்தி தேவையான உதவிகளை செய்துள்ளார். அவருடைய பாஸ்போர்ட்டை எடுத்து பார்த்தால் அவர் எங்கெல்லாம் எங்களுடன் வந்தார் என்பது தெரியும்.
மேலும், எங்களுடன் அவர் எத்தனை முறை வெளிநாடுகளுக்கு வந்துள்ளார் என்பதும் தெரியும். அப்போது அரசியல்வாதிகளுடன் அவர் வெளிநாட்டில் செய்த முதலீடுகள் தெரியும். அந்த ஏடிஜிபிக்கு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வேண்டும். அப்படி அவரை விசாரித்தால் மேலும், பல திடுக்கிடும் தகவல் வெளியாகும். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதை தொடர்ந்து அமலாக்கத்துறையினர் முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல்வாதிகள் வெளிநாடுகளில் முதலீடு செய்ததற்கான ஆவணங்களை சேகரித்து வருகின்றனர். இதை தொடர்ந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
வெளிநாடுகளில் பல ஆயிரம் கோடி முதலீடு செய்த தமிழக அரசியல் புள்ளிகள் அதிகாரிகள் யார், யார்? கொல்கத்தா தொழிலதிபர் வாக்குமூலம்
Reviewed by மறத்தமிழன்
on
December 25, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
December 25, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.