December 28, 2016
ஆசையாய் தங்க கொலுசு கேட்ட இறந்த மகளின் காலில் தங்க கொலுசு மாட்டி விட்ட தந்தை
கேரள மாநிலம் மால்மோட்டம் நகரைச் சேர்ந்த அனில் என்பவரது மகள் அனகா. இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளார். அனிலுக்கு தனது மகள் அனகா என்றால் கொள்ளை பிரியம். தனது மகளை ஒரு தேவதை போன்று வளர்த்து வந்தார். அனகாவும் தனது தந்தை மீது உயிரையே வைத்திருந்தாள்.
தங்க கொலுசு அணிய வேண்டும் என்ற ஆசை அனகாவுக்கு இருந்துள்ளது. இதனை தனது தந்தையுடம் தெரிவித்து, எப்படியாது தனக்கு தங்க கொலுசு வாங்கிதருமாறு கேட்டுள்ளார். ஆனால் பணபற்றாக்குறை காரணமாக அனிலால் தங்க கொலுசினை வாங்கி கொடுக்க முடியவில்லை.
இதற்கிடையில் தான் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த 16 ஆம் தேதி பள்ளியை விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த அனகாவின் மீது டெம்போ வேன் ஒன்று மோதியது.
மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட. அனகா ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அனகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி கிறிஸ்துமஸ் தினத்தன்று அனகா உயிரிழந்தார்.
இந்நிலையில் இறுதிச்சடங்கு நடைபெற்ற போது, வேகமாக நகைக் கடைக்கு சென்ற அனில், தனது மகள் ஆசைப்பட்டு கேட்டு தங்க கொலுசினை வாங்கி கொண்டு வந்து உயிரற்று கிடந்த தனது மகளின் காலில் மாட்டிவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை உருக வைத்துள்ளது. உயிரற்ற அனகாவின் காலில் மாட்டிவிடப்பட்ட அந்த கொலுசின் ஓசை தந்தை அனிலின் காதில் ஒலித்துக்கொண்டு தான் இருக்கும்
ஆசையாய் தங்க கொலுசு கேட்ட இறந்த மகளின் காலில் தங்க கொலுசு மாட்டி விட்ட தந்தை
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 28, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 28, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.