Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 16, 2016

வங்கிகளில் பண தட்டுப்பாடு நீடிப்பதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்!



தமிழகம் முழுவதும் வங்கிகளில் பண தட்டுப்பாடு நீடிப்பதால் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த நாட்டார்மங்கலம் இந்தியன் வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு பணம் கிடைக்காததால் 500-க்கும் மேற்ப்பட்டோர் கிருஷ்ணகிரி-பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் திடீர்  சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதனால் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  அரசியல்வாதிகள், வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமே வங்கியில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும், ஏழை மக்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.

கரூரில் ஸ்டேட் வங்கியில் 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்குவதைக் கண்டித்து வங்கி முன்பு அமர்ந்து வாடிக்கையாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த பசுபதிபாளையம் காவல் நிலைய போலீஸார் பொதுமக்களை சமாதானப்படுத்தியதை தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டனர். 

இது குறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது போதிய அளவில் பணம் கையிருப்பு இல்லை என்றும், வங்கியில் உள்ள பணத்தை பிரித்து கொடுப்பதாகவும் தெரிவித்தனர்.

கடலூர் மாவட்டம் லால்பேட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணம் எடுப்பதற்காக காத்திருந்த வாடிக்கையாளரை வங்கி மேலாளர் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. அதனை கண்டித்து 200க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் சிதம்பரம்-திருச்சி தேசிய  நெடுஞ்சாலையில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த காட்டுமன்னார் கோவில் காவல்துறையினர் சாலைமறியலில் ஈடுபட்ட வாடிக்கையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

ஓமலூர் அருகே பணக்காரர்களுக்கு மொத்தமாக பணத்தை கொடுத்து விட்டு பொதுமக்களுக்கு பணம் கொடுக்க மறுப்பதாக கூறி இந்தியன் வங்கி முன்பு பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

இதையடுத்து வங்கி முன்பு பாதுகாப்புக்காக நின்ற தீவட்டிப்பட்டி போலீசார், வங்கி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சேலத்தில் இருந்து பணம் வந்து கொண்டு இருப்பதாகவும், இதனால் மீண்டும் பணம் வழங்கப்படும் என கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.