December 7, 2016
அழகாக இல்லை என பேஸ்புக்கில் கமெண்ட்: பெற்றோர் கண்முன்னே துப்பாக்கியால் சுட்டு மாணவி தற்கொலை!
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்த 18 பள்ளி மாணவிக்கு பேஸ்புக்கில் தான் அழகாக இல்லை என கூறப்பட்டதால் மனமுடைந்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். பெற்றோரின் கண்முன்னே நிகழ்ந்த இந்த துயர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்த பிராண்டி வேலா என்ற 18 வயது பள்ளி மாணவி தனது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படங்களை போஸ்ட் செய்திருந்தார். அதனை பார்த்த பலர் பிராண்டி வேலா மிக குண்டாக இருப்பதாகவும் அழகாக இல்லை என்றும் கமெண்ட் போட்டுள்ளனர்.
இதனை பார்த்த பிராண்டிவேலா மனமுடைந்து போனார். பின்னர் அவர் தனது தங்கை ஜாக்கிலினுக்கு ‘உன்னை நேசிப்பதாகவும்இ தயவு செய்து இதனை நினைவில் வைத்துக்கொள்இ எல்லாவற்றுக்கும் என்னை மன்னித்துவிடு’ எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ந்து போன ஜாக்கிலின் அதனை தனது பெற்றோரிடம் காண்பித்துள்ளார். சந்தேகமடைந்த அவர்கள் உடனடியாக பிராண்டிவேலாவின் படுக்கையறைக்கு ஓடினர்.
அப்போது அங்கே கையில் துப்பாக்கியுடன் நின்றிருந்த பிராண்டிவேலா தான் குண்டாக அசிங்கமாக இருக்கிறேன் கூறியுள்ளார். மேலும இதனால் சாகப் போகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் நீ அழகாகதான் இருக்கிறாய் என கூறி கெஞ்சியுள்ளனர். ஆனால் தனது முடிவில் தீர்க்கமாக இருந்த பிராண்டிவேலா பெற்றோரின் கண்முன்னே துப்பாக்கியால் மார்பில் சுட்டுக்கொண்டு உயிரிழந்தார்.
அழகாக இல்லை என பேஸ்புக்கில் கமெண்ட்: பெற்றோர் கண்முன்னே துப்பாக்கியால் சுட்டு மாணவி தற்கொலை!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 07, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 07, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.