Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 15, 2016

கொலை செய்த சசிக்கு பொதுச் செயலாளர் பதவியா…?! தடை கேட்டு நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா எம்பி…!!



அதிமுக ராஜ்ய எம்பி சசிகலா புஷ்பா. இவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர். ராஜய சபாவில் அதிமுக எம்பியாகத்தான் உள்ளார்.
ஜெயலலிதா இறப்பின் போது, சசிகலா கணவர் நடராஜனை தோட்டத்தில் இருந்து வெளியேற்றியதாற்காக ஜெயலலிதாவை கொலை செய்துவிட்டதாகவும் கூறினார். இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
கொலை செய்த சசிகலாவுக்கா பொதுச் செயலாளர் பதவி?  தடை கேட்டு சசிகலா புஷ்பா எம்பி நீதி மன்றத்தை நாடப்போவதாகவும் கூறப்படுகிறது.
அதிமுகவில் ஒருவர் பொதுச் செயலாளராக வேண்டும் என்றால் அடிமட்ட தொண்டர்கள் முதல் அதிமுக உறுப்பினர்கள் அனைவருமே வாக்களித்து தேர்வு செய்ய வேண்டும்.
இது விதி 20-ல் பிரிவு 2-ல் எம்.ஜி.ஆர். அதிமுக அமைப்பு சட்டத்தில் கூறியிருக்கிறார். அதுபோல பொது செயலாளராக போட்டியிடும் நபர் தொடர்ந்து 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்றும் அமைப்பு விதி கூறுகிறது.
இந்த அதிமுக அமைப்பு சட்டவிதிகளை வைத்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப் போகிறார் என்றும், இது மட்டும் அல்லாது அதிமுகவின் கிளை கழகங்கள் உள்ள ஆந்திரா, கேரளா, கர்நாடகா டெல்லி, மும்பை உயர் நீதி மன்றங்களிலும் தடைவிக்க வழக்கு தொடரப்படுகிறது என்றும் தெரிய வருகிறது.
பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்தினால், அது தனி அதிகாரி முன்னிலையில் நடக்க வேண்டும.; இதனை வலியுறுததி நீதி மன்றங்களில் வழக்கு தொடரப்போவதாக சசிகலா எம்பியின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மழை விட்டாலும் தூவானம் விடாத கதையாக, உடன் பிறவா சகோதரியின் அதிமுக பொது செயலாளர் பதவிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கலாக வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.