Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 26, 2016

கமிஷன் அடிப்படையில் ரூபாய் நோட்டுகளை மாற்றும் கும்பல் கைது



தருமபுரி அருகே கமிஷன் அடிப்படையில் ரூபாய் நோட்டுகளை மாற்றும் கும்பலை சேர்ந்த மூன்று தரகர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பென்னாகரம்  பகுதியை சேர்ந்த மதி, பிரபு,செல்வக்குமார் ஆகிய மூவரும் ஓசூரிலிருந்து சொகுசு கார் மூலம் பழைய 500 ரூபாய் நோட்டுகள் 32 லட்ச ரூபாயின் கமிஷன் அடிப்படையில் மாற்றி செல்வதற்காக காரிமங்கலம் பகுதியிலுள்ள தனியார் ஓட்டலுக்கு வந்துள்ளனர்.
அங்கு புதிய 2000 ரூபாய் நோட்டுகளுடன் தங்கியிருந்த கரூரை சேர்ந்த கும்பலிடம் பணத்தை கொடுத்து மாற்றும்போது, கமிஷன் தொகை தொடர்பாக இருபிரிவினரிடமும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதியிலுள்ள கடைக்காரர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து, விரைந்து வந்த போலீசார் மூவரை கைது செய்துனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய 2 சொகுசு கார்கள், இருச்சக்கர வாகனம், புதிய 2000 ரூபாய் கட்டுகள் கொண்ட 20 லட்சத்து 60 ஆயிரமும், பழைய 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் கத்தி, வீச்சரிவாள் உட்பட ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.