தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அவர் வகித்து வந்த முதல்வர் பதவி பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்டது.
அவர் வகித்து வந்த அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் பதவி யாருக்கும் அறிவிக்கப்படவில்லை.
அ.தி.மு.க.,பொதுக்குழுவில் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அ.தி.மு.க.,அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் என, பதவியில் இருப்பவர்கள் பெரும்பாலும் ஜெயலலிதாவின் தோழியாக இருந்த சசிகலாவை நியமிக்க வேண்டும் என ஆதரவு தெரிவித்து வந்தனர்.
ஆனால், அதற்கு தொண்டர்கள் மத்தியில் வரவேற்பு இல்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியாக அ.தி.மு.க.,எம்.பி.,சசிகலா புஷ்பா களத்தில் இறங்கவுள்ளார்.
இவர் கூறுகையில்,‘‘கட்சியின் அடிப்படை உறுப்பினர்களுக்கு உள்ள உரிமையின் அடிப்டையில் நான் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன்.
நான் அ.தி.மு.க.,வில் தான் இருக்கிறேன். ராஜ்யசபாவில் கட்சியின் எம்.பி.,யாக இருக்கிறேன். என்னை நீக்கியதை எதிர்த்து தொடர்ந்துள்ள வழக்கில்,
சென்னை உயர்நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில், கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன் என்றார்.
இதையடுத்து சசிகலா நடராஜனை எதிர்த்து சசிகலா புஷ்பா போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.