Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 28, 2016

அதிமுக அலுவலகத்தில் அடி தடி பரபரப்பு! சசிகலா புஷ்பா கணவர் மீது சசிகலா ஆதரவாளர்கள் கொலை வெறித் தாக்குதல்-


அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்த அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவின் வழக்கறிஞரை சசிகலாவின் ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கினர். இதில் சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வருக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது.

அதிமுக பொதுக்குழு நாளை சென்னையில் கூடுகிறது. இப்பொதுக்குழுவில் சசிகலா பொதுச்செயலராக தேர்ந்தெடுத்தாக வேண்டும் என்பதில் மன்னார்குடி கோஷ்டி தீவிரமாக இருக்கிறது.

ஆனால் சசிகலாவுக்கு கட்சியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சசிகலாவை எதிர்த்து சசிகலா புஷ்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனிடையே அதிமுக பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிட மனு வாங்குவதற்காக அக்கட்சி தலைமை அலுவலகத்துக்கும் சசிகலா புஷ்பா வரப்போவதாக இன்று பிற்பகல் தகவல் பரவியது. இதையடுத்து வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் தமது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். மேலும் குண்டு குண்டாக பலரை கேட்டிலேயே நிறுத்தி வைத்திருந்தனர்.

இந்த நிலையில் சசிகலா புஷ்பாவின் வழக்கறிஞரும், அவரது கணவர் லிங்கேஸ்வரனும் அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் வந்தனர். அவர்களை அடையாளம் கண்டு கொண்ட சசிகலா ஆதரவாளர்கள் கும்பல் அவரை சூழந்து கொண்டு அடித்து உதைத்தது. சரமாரியாக விழுந்த அடியைத் தாங்க முடியாமல் அவர்கள் அலறினர்.
ஆனாலும் விடாத அந்தக் கும்பல் இருவரையும் பிடித்து இழுத்து அடித்தபடியே ஓடியது. போலீஸார் தலையிட்டு காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதில் லிங்கேஸ்வரனுக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. அவர் அய்யோ, அம்மா என்று அலறியபடி ஓடினார். அவரை போலீஸார் மீட்டு மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றனர்.

அதேபோல சசிகலா புஷ்பாவின் வக்கீலும் மீட்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டார். அதிமுகவினரின் இந்த கொலை வெறித் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.