Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 16, 2016

மிடாஸ், ஜாஸ் சினிமாஸ், ஜெயா பைனான்ஸ்.. இன்னும் இன்னும்..சசிகலாவின் கோஷ்டியின் பிசினஸ் சாம்ராஜ்யம்!



ஜெயலலிதா 2-வது முறையாக முதல்வரான போது 2002-ம் ஆண்டு இத்தொழிற்சாலை அமைக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் சிறுமாத்தூர் கிராமத்தில் மிடாஸ் தொழிற்சாலை அமைந்துள்ளது. அதிமுக ஆட்சியில்தான் என்று இல்லை திமுக ஆட்சியிலும் கூட மிடாஸ் தொழிற்சாலையில் இருந்து 'சரக்குகள்' தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளுக்கு கொள்முதல் செய்யப்படும்.
மன்னார்குடி வகையறாக்களுக்கு சொந்தமான சிக்னெட் எக்ஸ்போர்ட் நிறுவனம் மற்றும் ஜாஸ் சினிமாஸ் இரண்டும் தலா 48.4% பங்குகளை வைத்துள்ளன. ஜாஸ் சினிமாவின் ஒரிஜனல் ஓனர்களான எம்.ஆர். அன்புக்கரசு, எஸ், நாகையனிடம் எஞ்சிய பங்குகள் உள்ளன. ஜாஸ் சினிமாஸில் சிவகுமார், கார்த்திகேயன் இருவருமே போர்டில் உள்ளனர்.
1998-ம் ஆண்டு ஜெயா டிவியை தொடங்கியது மாவிஸ் சாட்காம். இதன் போர்டில் சிவகுமாரும் கார்த்திகேயனும் இடம்பெறவில்லை. ஆனால் சிவகுமாரின் மனைவி பிரபா சிவகுமார்தான் நிர்வாக இயக்குநர். பிரபாரவின் சகோதரி அனுராதாவும் ஜெயா டிவியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர். அனுராதா, சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மூத்த மகனான டிடிவி தினகரனை திருமணம் செய்துள்ளார். இந்நிறுவனத்தில் 81% பங்குகளை வைத்திருப்பவர் 'சின்னம்மா' சசிகலா.
சிக்னெட் எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜாஸ் சினிமாஸ் நிறுவனங்கள் ஜெயா டிவியின் மாவிஸ் சாட்காமில் தலா 4% பங்குகளை வைத்துள்ளன. எஞ்சிய பங்குகள் 'மன்னார்குடி வகையறாக்களிடம்' உள்ளன.
சசிகலாவின் கணவர் நடராஜன் வகையறாவைச் சேர்ந்த குலோத்துங்கம் மற்றும் சண்முகம்தான் இக்கம்பெனிகளின் பங்குகளை வைத்துள்ளனர். மிகப் பெரிய அளவிலான பிசினஸில் இக்கம்பெனி ஈடுபடவில்லை. இந்த நிறுவனம் ரூ5.76 கோடி கடன் வாங்கி அதில் ரூ2.66 கோடிக்கு மிடாஸ் பங்குகளையும் ரூ2.56 கோடிக்கு மாவிஸ் சாட்காம் பங்குகளையும் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மன்னார்குடி வகையறா இளவரசி வசம் 90% பங்குகள் உள்ளன. இந்த நிறுவனம் நீண்டகால கடனாக ரூ15.97 கோடி வாங்கியுள்ளதாம்.
மன்னார்குடி வகையறாக்களின் பிசினஸ் வலது கரங்களான சிவகுமாரும் கார்த்திகேயனும் இயக்குநர்களாக உள்ள மேலும் சில நிறுவனங்கள்:
குரியோ ஆட்டோ மார்க்
ஏ வோல்ர்ட் ராக்
ஆவிரி ப்ராபெர்ட்டீஸ்
பேன்சி ஸ்டீல்ஸ்
காட்டேஜ் பீல்ட் ரிசார்ட்ஸ்
ஸ்ரீஹரி சந்திரா எஸ்டேட்ஸ்
ஜெ. ஜெயலலிதா எனும் ஜெயலலிதா முதல்வர் பதவி வகித்ததைப் பயன்படுத்தி மன்னார்குடி வகையறாக்கள் உருவாக்கிய கம்பெனிகள் இவை. இவற்றின் ஏகபோக முதலாளியான 'தொழிலதிபர்' சின்னம்மாதான் இனி அதிமுகவுக்கும் ஓனராகப் போகிறார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.