December 28, 2016
மீட்கப்பட்ட கறுப்பு பணம் எவ்வளவு? ராகுல் காந்தி கேள்வி...! திணறும் பிரதமர் மோடி
பணம் எடுக்கும் விவகாரத்தில் அனைத்து கட்டுபாட்டையும் தளர்த்த வேண்டும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசிஉள்ளார்.
கருப்பு பணத்தை ஒழிக்கும் அதிரடி நடவடிக்கையாக புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8–ந் தேதி அதிரடியாக தடை விதித்தார். மேலும், இதனால் ஏற்படும் விளைவுகள் 50 நாட்களில் சீரடைந்து விடும் என்று கூறினார்.
ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு நடவடிக்கை தொடங்கிய போது இருந்த நிலையைவிட இப்போதைய நிலையில் முன்னேற்றம் காணப்படுகிறது என்றாலும் பிரச்சனைகள் தொடர்ந்து நீடித்துதான் வருகிறது. வங்கிகள், ஏடிஎம்களில் பணம் எடுக்க வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ள நிலையிலும் பணம் இல்லாமம் வாடிக்கையாளர்கள் எடுக்கமுடியாத நிலையானது தொடர்ந்து நீடிக்கிறது. பிரதமர் வழங்கிய காலக்கெடுவானது முடிவடையும் நிலையில் நிலையானது இப்போதுவரையில் சரியாகவில்லை என்றும் பின்னரும் நிலைமை சரியாகவில்லை என்றால் பிரதமர் மோடி பதவி விலகுவாரா? என்றும் எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பிஉள்ளன.
இவ்விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் 8 எதிர்க்கட்சிகள் ஒன்று கூடிஉள்ளன. ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வரும் ராகுல் காந்தி, பணம் எடுக்கும் விவகாரத்தில் நீடித்துவரும் கட்டுப்பாட்டை தளர்த்தவேண்டும் என்று கூறிஉள்ளார்.
ராகுல் காந்தி பேசுகையில், “பிரதமர் மோடி எவ்வளவு கறுப்பு பணத்தை மீட்டார் என்பது தொடர்பான தகவல்களை தெரிவிக்க வேண்டும், தேசத்திற்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு எவ்வளவு, எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதையும் தெரிவிக்கவேண்டும். நவம்பர் 8-ம் தேதிக்கு முன்னர் 2 மாத காலத்திற்கு வங்கி கணக்கில் 25 லட்சத்திற்கு மேலாக ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்தவர்கள் தொடர்பான தகவல்களை மத்திய அரசு வெளியிட வேண்டும். ரூபாய் நோட்டுகள் எடுப்பதற்கு விதிக்கப்பட்டு உள்ள தடையை உடனடியாக நீக்கவேண்டும். இது மக்களின் பணம் வைத்திருப்பதற்கான சுதந்திரத்தை பறித்துவிட்டது.
பொதுமக்கள் அவர்களுடைய சொந்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து உள்ளனர். அவர்கள் பணத்தை எடுப்பதற்கு விதிக்கப்பட்டு உள்ள கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும். ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையினால் விவசாயிகள் எவ்வாறு பாதிக்கப்பட்டு உள்ளனர், அவர்களுக்கான இழப்பீடை எவ்வாறு சரிசெய்யப் போகிறார் என்பதையும் பிரதமர் மோடி தெரிவிக்க வேண்டும். விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யவேண்டும். விவசாயிகளே அதிகளவு பாதிக்கப்பட்டு உள்ளனர்,” என்று கூறிஉள்ளார்.
மீட்கப்பட்ட கறுப்பு பணம் எவ்வளவு? ராகுல் காந்தி கேள்வி...! திணறும் பிரதமர் மோடி
Reviewed by மறத்தமிழன்
on
December 28, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
December 28, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.