December 19, 2016
நடமாட முடியாத சூழ்நிலை மட்டும் வரவே கூடாது சசி…செத்துடலாம்…!? ஜெ. என்றோ சொன்னது…! அப்போ…??
சசிகலாவை இன்று நாம் வாய்க்கு வந்தபடி எல்லாம் எளிதாக பேசுகிறார்கள். கேலி பேசுகிறார்கள். நக்கல் அடிக்கிறார்கள் ..!
கேள்விகள் கேட்கிறார்கள்..! கொள்ளைக்காரி என்கிறார்கள்..! ஆனால் இந்த எந்த விஷயங்களுக்கும் இதுவரை சசிகலா வாய் திறக்கவில்லை..!
கேஸ் போட்டு இழுத்தடிகவில்லை..ஆள் வைத்து அடிக்கவில்லை. போலீசை ஏவி விட வில்லை..! அத்தனைக்கும் அமைதி..!
ஒரு விஷயம் தெரியுமா நண்பர்களே..? ஹிட்லர் தான் இறந்த பின் தனது உடல் எதிரிகளின் கையில் கிடைத்து விடக்கூடாது எரித்து விடுங்கள் என்றார்..!
மாவீரன் பிரபாகரன் அதையே தனது தம்பிகளிடம் கேட்டார். மாவோ தனது செஞ்சேனைப் படைகளிடம் அதையே சொன்னார்.
லெனின்..காஸ்ட்ரோ..போன்ற தன்மானத்திற்கு பயந்த அத்தனை பேருமே தான் இறந்த பிறகு தனது உடம்பை எதிரிகள் கேலிப் பொருள் ஆக்கி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.
அம்மாவை எடுத்துக் கொள்ளுங்கள் மிகப்பெரும் புகழ் பெற்ற நடிகை. புகழ் பெற்ற தலைவி..! தமிழக முதல்வர். தனக்கு நடக்க முடியாத சூநிலையில்… கால்களை இழந்த நிலையை எப்படி சம்மதிப்பார்…?
இப்படிதான் கேட்கிறார்கள் நடு நிலையாளர்கள்…!!
ஜெ., வைப் பொறுத்தவரை சுயமரியாதையைக் கட்டிக் காப்பதில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்பவர்.
எல்லாவற்றியும் விடுவோம் நண்பர்களே….முப்பது ஆண்டுகள்.. நாம் வளர்க்கும் பிள்ளைகள் கூட இருபது வயதில் திருமணம் ஆகி கணவன் வீடு சென்று விடுவார்கள்.
ஆனால், நகமும் சதையுமாக..ஒரே வீட்டில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு மகிழ்ச்சி சோகம்..சிரிப்பு விளையாட்டு என்று எப்படி எல்லாம் வாழ்ந்திருப்பார்கள்..!
கொலை செய்ய எப்படி மனது வரும்..? கொள்ளை அடிக்க எப்படி மனம் வரும் ?திருட எப்படி மனம் வரும்..?
தனக்கு மிக அதிகமான நோய் பீடிக்கப்பட்டு நடக்க முடியாத சூழல் ஏறபடும் போது வாழ்வதை விட சாவது மேல் என்று ஒரு முறை அம்மா சொன்னதாகக் கூறுவார்கள்..!
சசிகலாவுக்கு கவுன்சிலர் பதவி கூட கொடுக்கவில்லை என்று கேட்கிறார்கள். அம்மா தெளிவாக இருந்தார்.
தனக்குப் பின் சசிதான் கழகம். சசிதான் தலைவர். சசிதான் முதல்வர். சசிகலா அதை விரும்பினாரோ இல்லையோ..?
காலத்தின் கட்டாயம் சசிகலா தான் தலைமை ஏற்பார். ஏற்க வேண்டும். அது சசி ஆசை இல்லை…அம்மாவின் ஆசை..!
நடமாட முடியாத சூழ்நிலை மட்டும் வரவே கூடாது சசி…செத்துடலாம்…!? ஜெ. என்றோ சொன்னது…! அப்போ…??
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 19, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 19, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.