Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 22, 2016

மருத்துவமனையிலிருந்து கருணாநிதி நாளை வீடு திரும்புவார் என தகவல்!


காவேரி மருத்துவமனையிலிருந்து திமுக தலைவர் கருணாநிதி நாளை வீடு திரும்புவார் என கனிமொழி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்றும் பல்வேறு பிரமுகர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர்.

நுரையீரல் தொற்று காரணமாக திமுக தலைவர் கருணாநிதி கடந்த 15ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் எஸ். திருநாவுக்கரசர், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ், பேராயர் சின்னப்பா உள்ளிட்டோர் காவேரி மருத்துவமனையில் கருணாநிதியின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தனர்.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ள திமுக தலைவர் கருணாநிதி நாளை வீடு திரும்புவார் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.