December 26, 2016
யோகாவிற்கு முதன்மை விளையாட்டு என்ற அங்கீகாரமும் ரத்து.. மோடியின் முயற்சி வீணானதா
யோகா இனி விளையாட்டு இல்லை... முதன்மை விளையாட்டு என்ற அங்கீகாரமும் ரத்து.. மோடியின் முயற்சி வீண்
யோகா ஒரு விளையாட்டாக மோடி அறிவித்த நிலையில் அதற்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
யோகா ஒரு விளையாட்டாக கொள்ள முடியாது என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்து அதற்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. இனி யோகா ஆயூஷ் அமைச்சகத்தின் கீழ் வரும்.
பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்றத்தில் இருந்து யோகாவுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. பிரதமர் மோடியும் பெரிய அளவில் யோகாவை பிரச்சாரம் செய்து வந்தார். இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் யோகா ஒரு விளையாட்டு என்ற அங்கீகாரம் மோடியால் வழங்கப்பட்டது. மேலும் யோகாவை முதன்மை விளையாட்டு என்ற பட்டியலில் கீழ் வைக்கப்பட்டது. இதன் மூலம் இந்த விளையாட்டுக்கு மத்திய அரசு நிதியுதவி கிடைக்க வழி வகை செய்யப்பட்டது.
இந்நிலையில், 15 மாதங்களுக்கு பிறகு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம், யோகாவிற்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. மற்ற விளையாட்டுக்களில் போட்டிகள் நடத்துவது போன்று யோகாவில் போட்டிகள் நடத்த முடியாது என்று அங்கீகாரம் ரத்திற்கான காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த விளையாட்டு, முதன்மை விளையாட்டின் கீழ் கொண்டு வரப்படுகிறதோ அந்த விளையாட்டு, ஆசிய விளையாட்டு போட்டி, ஒலிம்பிக் போட்டி மற்றும் காமன்வெல்த் போட்டிகளில்
பங்கேற்கும் வாய்ப்பைப் பெறும். ஆனால் யோகாவை விளையாட்டாக கருத முடியாது என்றும் எந்த வகையிலும் யோகா போட்டிகளை நடத்த முடியாது என்றும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. அதனால் ஆயூஷ் அமைச்சகத்தின் கீழ் யோகா கொண்டு வரப்பட்டுள்ளது.
யோகாவிற்கு முதன்மை விளையாட்டு என்ற அங்கீகாரமும் ரத்து.. மோடியின் முயற்சி வீணானதா
Reviewed by மறத்தமிழன்
on
December 26, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
December 26, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.