Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 17, 2016

அரசியல்வாதிகளுக்கு வரி விதிவிலக்கு! - மத்திய மோடி அரசு


”அரசியல்வாதிகள் வங்கியில் பழைய நோட்டுக்களை எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம் வரி கிடையாது” - மத்திய அரசின் அறிவிப்பால் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு!

அரசியல் வாதிகள் பழைய நோட்டுக்களை எவ்வளவு வேண்டுமானாலும் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யலாம்  அதற்கு எந்த கேள்வி கணக்கும் இல்லை அதற்கு வருமான வரியும் கிடையாது என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு பிரதமர் மோடியை பெரிதும் நம்பியிருந்த சாமானிய மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் வாதி பழைய 500 , 1000 ரூபாய் நோட்டுக்களை அரசியல் கட்சியின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யலாம். வருமான வரித்துறை அதற்கு எந்த கேள்வியும் கேட்காது. வரி செலுத்தவும் தேவையில்லை என மத்திய அரிசின் வருவாய் துறை செயலாளர் Hasmukh Adhia இன்று அறிவித்துள்ளார்.

20 ஆயிரத்திற்கு கீழ் நிதி கொடுத்தவர்களின் பெயர்களை Representation of the People Act, 1951 சட்டப்படி அரசியல்வாதிகள்  தேர்தல் ஆணையத்திற்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடதக்கது.

சாதார பாமரனுக்கு கெடுபிடிகளை விதிக்கும் அரசு கருப்ப பணத்தின் பிறப்பிடமாய் திகழும் அரசியல் வாதிகளுக்கு சலுகை அளித்துள்ளது எதை காண்பிக்கின்றது இது கருப்பு பணத்தை ஒழிக்கும் திட்டமா ?

இப்பொழுது எல்லோரும் என்ன செய்வார்கள் தங்களிடம் உள்ள பணத்தை வெள்ளையாக்க அரசியல் வாதிகளிடம் கொடுப்பார்கள் நாட்டில் உள்ள அனைத்து பணமும் அரசியல்வாதிகளின் கையில் வந்து விடும்.

இதற்கு தான் இந்த நோட்டு அறிவிப்பா ? யாரை ஏமாற்று பார்கின்றது அரசு ?

மருத்துவமனைகளில் பழைய நோட்டுக்களை பயன்படுத்த அனுமதித்தால் கருப்பு பணம் வந்து விடும் என உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்த மத்திய அரசு , அரசியல் வாதிகளுக்கு மட்டும் நீ எவ்வளவு வேனுமானாலும் போடு நாங்க கேள்வி கேக்க மாட்டோம் எனக் கூறுவது எந்த விதத்தில் நியாயம், அரசியல் வாதிகளின் சாயம் வெளுத்து விட்டது , எல்லா சட்டங்களையும் மாற்றி சாமானியனுக்கு கெடுபிடிகளை விதித்திருக்கும் அரசு ஏன் அரசியல் வாதிகளுக்கு அளித்த சலுகையை ரத்து செய்யாமல் சலுகை அளிததுள்ளது. ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு அரணாகவே இது உள்ளது என சரமாரியாக சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அரசயல் வாதிகளுக்கு இனி நல்ல வேட்டை!


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.