December 28, 2016
திருப்பூரில் கமிஷனுக்கு புதிய ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்றவர்கள் கைது
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் கமிஷனுக்கு புதிய ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்றவர்களை போலீஸார் கைது செய்தனர்.
கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த துல்புகார் அலி, ஹாரூன் ரசீத் ஆகியோரிடம் இருந்த புதிய 2000 ரூபாய் நோட்டுகளை, 10 சதவீத கமிஷனுக்கு 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றித் தருவதாக இளையராஜா, குப்புராஜ் உள்ளிட்ட 4 பேர் கூறியுள்ளனர்.
அதன்படி 36 லட்சம் ரூபாயுடன் நான்கு பேரும் பெருமாநல்லூருக்கு காரில் சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீஸார், கோவை சாலையில் காரை நிறுத்தி சோதனையிட்டு, 36 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
வருமான வரித் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதால், வருமான வரி விசாரணை ஆய்வாளர் நீரஜ்குமார், கிருஷ்ணன் உள்ளிட்டோர் பெருமாநல்லூர் காவல் நிலையத்திற்கு சென்று, 4 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
கமிஷனுக்கு ரூபாய் நோட்டுகள் மாற்ற முயன்றதில் தொடர்புடையவர்கள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
திருப்பூரில் கமிஷனுக்கு புதிய ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்றவர்கள் கைது
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 28, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 28, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.