December 19, 2016
பல சந்தேகங்கள் நிறைந்த பதான்கோட் தாக்குதல் சம்பவம் குற்றப்பத்திரிகையில் தீவிரவாதி மசூத்அசார்
பல சந்தேகங்கள் நிறைந்த பதான்கோட் தாக்குதல் தொடர்பான என்.ஐ.ஏ. குற்றப் பத்திரிகையில் தீவிரவாத இயக்க தலைவர் மசூத்அசார், அவரது சகோதரர் அப்துல் ரவூப் அஸ்கர் மற்றும் 2 தீவிரவாதிகளின் பெயர் இடம் பெற்றுள்ளன.
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளம் மீது கடந்த ஜனவரி மாதம் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் உள்பட 8 பேர் பலியானார்கள். பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் ஈடுபட்டு இருந்தது தெரிய வந்தது. இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) விசாரணை நடத்தி வந்தது.
இந்த நிலையில் பதான்கோட் தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. பதான்கோட் சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட இந்த குற்றப் பத்திரிகையில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்க தலைவர் மசூத்அசார், அவரது சகோதரர் அப்துல் ரவூப் அஸ்கர் மற்றும் 2 தீவிரவாதிகளின் பெயர் இடம் பெற்றுள்ளன.
பல சந்தேகங்கள் நிறைந்த பதான்கோட் தாக்குதல் சம்பவம் குற்றப்பத்திரிகையில் தீவிரவாதி மசூத்அசார்
Reviewed by மறத்தமிழன்
on
December 19, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
December 19, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.