சசிகலாவிற்கு இன்று காலை நல்ல சேதியும், கெட்ட சேதியும் சேர்ந்தே வந்து விட்டது. இந்தப் பக்கம் அதிமுக வினர் ஒன்று கூடி பொதுச்செயலாளர் பதவியை வழங்கி விட்டனர் .
அதே நேரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜோன்ஸ் என்பவர் ஜெ., மரணம் குறித்து பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார்.
நீதிபதி வைத்தியநாதன் தலைமையில் விசாரணைக்கு வந்து விட்டது வழக்கு. நீதிபதியும் ஜெ.,மரணத்தில் தனக்கும்,மக்களுக்கும் சந்தேகம் இருக்கிறது என்றார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், திடீரென்று இறந்தது எப்படி என்று கேட்டுள்ளார் .
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஜோன்ஸ் என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு, நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும், பார்த்திபன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அரசியல் பார்வையாளர்கள் இந்த நிகழ்வு தற்செயல் அல்ல என்கிறார்கள். ஒரு புறம் பதவி கிடைத்த போதே, இன்னொரு பக்கம் நீ குற்றவாளி என்பதை மனதில் வைத்துக் கொள் என்று டெல்லி, சசி டீமிற்கு உணர்த்தும் ஒரு எச்சரிக்கை சமிக்ஞை என்கிறார்கள்.
எந்த நேரமும் சசி கைது செய்யப்படும் அளவிற்கு கையில் நிறைய ஆதாரங்கள் இருக்கிறது என்கிறார்கள். எப்படியோ அம்மா மரணம் குறித்த மர்மங்கள் வெளிவந்தால் போதும் என்கிறார்கள் மக்கள்.
இது குறித்து மத்திய,மாநில அரசுகள் 9ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன் 9ம் தேதிக்கு வழக்கை நீதிபதிகள் தள்ளிவைத்துள்ளனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.