December 29, 2016
சசிகலாவை நெருக்கும் வழக்குகள்..! கட்சியை காப்பாற்ற காத்திருக்கும் தீபா…!
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அம்மாவின் வழியில் கட்சியியை சின்னம்மா வழிநடத்தி செல்வார் என்று நிர்வாகிகள் தங்கள் விசுவாசத்தை தெரிவித்திருக்கிறார்கள்.
சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டிக்கும் வேளையில், உயர்நீதிமன்றத்தில் ஜெ., மரணம் தொடர்பாக ஜோன்ஸ் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் தனக்கும் சந்தேகம் இருப்பதாக நீதிபதி தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கு, ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு மற்றும் வருமான வரித்துறை சோதனை போன்றவைகளால் சசிகலா நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜெ.,வின் அண்ணன் மகள் தீபாவிற்கு ஆதரவு தெரிவித்து வரும் தொண்டர்கள் சசிகலா பொதுச்செயலாளராக பொறுப்பு ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பேன் என்றும், அதுவரை தொண்டர்கள் அமைதி காக்கவும் என்றும் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏதாவது ஒரு வழக்கில் சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அப்போது கட்சியை தன் கைவசம் கொண்டு வரலாம் என்றும் தீபா கருதுவதாக தெரிய வருகிறது.
எனவே, சரியான தருணம் பார்த்து காத்திருப்பதாகவும், அதுவரை அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் பேனர்கள், போஸ்டர்கள் எதுவும் வைக்க வேண்டாம் என்றும் தெரிவித்தாக கூறப்படுகிறது.
சசிகலாவை நெருக்கும் வழக்குகள்..! கட்சியை காப்பாற்ற காத்திருக்கும் தீபா…!
Reviewed by மறத்தமிழன்
on
December 29, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
December 29, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.