Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 18, 2016

“அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும்” - ஜெயலலிதா சமாதியில் தீர்மானம்



அதிமுக பொதுச்செயலாளராக வி.கே. சசிகலா பொறுப்பேற்க வேண்டி அதிமுக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் சார்பில் ஜெயலலிதா சமாதியில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் தமிழக அமைச்சர்கள், அதிமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் வந்தனர். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதலமைச்சர் பன்னீர்செல்வம் மலரஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து, தமிழக அமைச்சர்கள், அதிமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

12வது நாளாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே, அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டி அதிமுக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் சார்பில் தீர்மானம் நிறைவேற்றி கையெழுத்திட்டனர்.

ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மாவட்ட நிர்வாகிகள் கையெழுத்திட்ட கடிதத்தை சசிகலாவிடம் கொடுத்து, அவரை அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்க அக்கட்சியினர் போயஸ் கார்டன் சென்றனர். இதனையடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.