Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 8, 2016

நான் அஞ்சலி செலுத்த போயே தீருவேன்! ‘ -புறப்பட்ட சசிகலா புஷ்பா…பாய்ந்து தடுத்து காலில் விழுந்து கதறி



தன் வாழ்வை ஒரு நடிகையாக ஆரம்பித்து, ஒரு அரசியல் தலைவியாக மாறி, தமிழக முதல்வராய் இருந்த  ஜெயலலிதா காலம் ஆனார் என்று அறிவித்தவுடன் சசிகலா புஷ்பா அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தவேண்டும் என்று கிளம்பினாராம்.
அவரது கணவர் பாய்ந்து தடுத்து காலில் விழுந்து கதறி அழுது, ‘மீண்டும் மீண்டும் வம்பை விலை கொடுத்து வாங்காதே…சசி” என்று கதறினாராம்.
நேற்று காலை, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி அரங்கிற்கு கொண்டு சென்றவுடன்…மனம் கேட்காமல், கணவர் தடுத்தும் வீறு கொண்டு எழுந்து அஞ்சலி செய்ய புறப்பட்டாராம்.
ஆனால், தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
இது குறித்து சசிகலா புஷ்பா…” ஜெயலலிதா என் அரசியல் ஆசான். அவரின் மறைவு அரசியல் ரீதியான என் பேரிழப்பு. அவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த கூட என்னை விடவில்லை என்பது என் வருத்தம். ” என்று சொல்லியுள்ளார்.
” அம்மா இறக்க முதல் 6 டென்ஷன்களில்…முதல் டென்ஷனே, சசிகலா புஷ்பா தான். இது அம்மாவை பற்றி பேசுவது தான் கேட்க முடியவில்லை’ என்று அதிமுக வட்டாரம் முணுமுணுக்கிறதாம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.