Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 20, 2016

ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பு திடீர் வாபஸ். ஜனாதிபதி அதிரடி முடிவு


 
இந்தியாவை போலவே உயர்மதிப்பு ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக அறிவித்த வெனிசுலா அதிபர், மக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக இன்று திடீரென வாபஸ் பெற்றுவிட்டார். இதேபோன்று இந்திய பிரதமரும் அறிவிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த வாரம் வெனிசுலா அதிபர் உயர்மதிப்பு கொண்ட பொலிவரை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். ஆனால் உடனடியாக மக்கள் கொந்தளித்து தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் நான்கு பேர் உயிரிழந்துவிட்டனர்.
எனவே அதிபர் வேறு வழியின்றி பின்வாங்கி தனது அறிவிப்பை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். வெறும் 4 உயிர்கள் போனதற்கே வெனிசுலா அதிபர் வாபஸ் பெற்றுவிட்டார். ஆனால் இங்கு 150க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியான நிலையிலும் இந்திய பிரதமர் வாய்மூடி மெளனியாக இருப்பது ஏன்? என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.