Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 25, 2016

இன்ஸ்பெக்டர் செய்த துரோகம்..! குடிக்க வைத்து, இன்பம் கொடுத்து, கழுத்தை அறுத்து..! கடவுளே..! உஷார்..


விழுப்புரம் மாவட்டம் சேந்தநாடு கிராமத்தை சேர்ந்த பாவாடைசாமியின் மகன் கணேசன் (30). இவர் சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தார்.

கடந்த வருடம் வேறொரு கள்ளக்காதல் பிரச்சினை தொடர்பாக கிள்ளை போலீஸ் நிலையத்திற்கு வனிதா(28)என்பவர் வந்தார். ஓங்கி உயர்ந்த வனிதாவின் அழகில் சொக்கிப் போனார் கணேசன்.

திருமணம் ஆகாதவர். வாலிப ஏக்கம். வனிதாவின் அழகில் வீழ்ந்தார். இந்தப் பெண்ணோடு ஒரு நாலாவது வாழ்ந்து விட வேண்டும் என்ற வெறியே வந்தது.

பெரு மூச்சு விட்டபடி போன் நம்பர் கேட்டார் கணேசன். கொடுத்தாள் வனிதா. போன் நம்பர் வாங்கினார் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன். அன்று இரவே போன் செய்தார், வழிந்தார்.

அடுத்தடுத்த நாட்களில் வனிதாவை காதல் வலையில் வீழ்த்தினார். வனிதாவும் காதலில் உருகினார். ஜோடிகள் ஊர் சுற்றினார்கள். வாக்குறுதிகளை அள்ளி வழங்கினார் கணேசன்.

உடலால் பல முறை இணைந்தார்கள். ஊட்டி போனார்கள்.கொடைக்கானல் போனார்கள்.பரிசு மழையால் நனைத்தார்.

திருமணம் செய்து கொள்வதாக கணேசன் அளித்த உறுதியின்படி இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்தார்கள்.

கணேசன் வீட்டில் பெண் பார்த்தார்கள். வனிதாவுடனான தொடர்பை மறைத்து விழுப்புரத்தைச் சேர்ந்த பெண்ணை முறையாக திருமணம் செய்து கொண்டார் கணேசன்.

கடும் அதிர்ச்சி அடைந்தார் வனிதா. திருமணம் ஆன ஒரே மாதத்தில் ஆடி மாதம் வந்தது. மனைவி ஊருக்கு போய் விட்டார்.காய்ந்து போனார் கணேசன். மீண்டும் வனிதா மீது ஆசை வந்தது . கூடவே சனியனும்.

ஒரு சனிக்கிழமை சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள தனி வீட்டில் இருந்த கணேசனைச் சந்தித்துள்ளார் வனிதா.

ஏற்கனவே கணேசன் மீது கோபத்தில் இருந்த வனிதா, இந்தச் சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

பகல் பூராவும் இருவரும் மது அருந்தினார்கள். மது அருந்தும் போதெல்லாம் கணேசனுக்கு தன்னையும் கொடுத்தார் வனிதா.

இத்தனை முறை தான் என்றில்லை. ஆசையை தீர்த்தார்கள்.நிறைய மது ஊற்றிக் கொடுத்துக் கொண்டே இருந்தார் வனிதா.

ஒரு நிலையில் தன்னிலை மறந்து மட்டை ஆனார் கணேசன். ஒரு செங்கல்லை எடுத்து வந்து கணேசன் தலைக்கு கொடுத்தார் வனிதா வாங்கி வந்த  கத்தியை எடுத்தார்.

கறகற வென்று கணேசன் கழுத்தை அறுக்கத் துவங்கினார்.துடிக்க கூட இல்லை.நல்ல போதையிலேயே கணேசன் உயிர் பிரிந்தது.

கழுத்தை அறுத்து கணேசனைக்கொலை செய்த வனிதா பஸ்சில் தப்பிச்செல்லும்போது போலீஸில் சிக்கினார்.

கணேசன் மனைவி விதவையாக பரிதாபமாக நிற்கிறார். சுய கட்டுப்பாடும், சுய ஒழுக்கமும் இல்லை என்றால் இப்படி ஒரு ஆபத்தில் சிக்கியே ஆகவேண்டும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.