Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 13, 2016

“என்ன வச்சு பணம், பதவி சம்பாதிக்க நெனச்சா தொலைச்சிடுவேன்,போயஸை விட்டு போங்க!” சசிகலா அதிரடி!


 
மன்னார்குடி சொந்தங்கள் அனைவரையும் போயஸ் கார்டனில் இருந்து சசிகலா வெளியேற்றியுள்ளதாக மின்னம்பலம் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. 9 ஆம் தேதி வேதா இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த  ஜெயலலிதா உருவப்படத்தை வணங்கி அமைதியாக அமர்ந்திருந்த சசிகலா, சொந்தங்களை நோக்கி நான் சொல்வதை கேளுங்கள் என மெதுவாக பேச தொடங்கினாராம்.
நீங்கள் இங்கு இருப்பது ஊடகங்களில் செய்தியாக வெளியாகி கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. அதனால் நீங்கள் இங்கிருந்து செல்லுங்கள். நான் கூப்பிடும் போது வாருங்கள் என தெரிவித்துள்ளார்.
நீங்கள் மட்டும் எப்படி தனியா இருப்பீங்க என இளவரசி கேட்க, அதெல்லாம் பிரச்சனை இல்லை நான் இருப்பேன் என கூறினாராம். எனது செல்வாக்கை பயன்படுத்தி, பணம் காசு, பதவி சம்பாதிக்க நினைத்தால் தொலைத்து விடுவேன் என எச்சரித்துள்ளார்.
இதனால் அதிர்ந்த சொந்தங்களில் பலர் அன்று இரவே வெளியேறிய நிலையில், 10ஆம் தேதி காலை அனைவரும் வெளியேறி விட்டனராம். தற்போது சசிகலா மட்டுமே போயஸ் கார்டனில் உள்ளாராம். திவாகர், வெங்கடேஷ், விவேக் உள்ளிட்ட சிலர் வந்து வந்து செல்கின்றனராம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.