December 14, 2016
ஜெயலலிதா வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்!!…சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்!!..
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பலர் சந்தேகங்கள் எழுப்பிய நிலையில், தற்போது அவரது இறப்பு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் 22ஆம் தேதி உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சைக்கு பிறகு கடந்த டிசம்பர் 5ஆம் தேதி அவர் உயிரிழந்துவிட்டதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
இதனையடுத்து, அவரது மரணத்தில் பல சந்தேகங்கள் இருப்பதாக பலர் கேள்வி எழுப்பினர். மேலும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த ஆவணங்களை வெளியிட கோரி எதிர்ப்புகள் வலுத்தன.
இதனைதொடர்ந்து, தற்போது தெலுங்கு யுவசக்தி தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சரவணன் என்பவர், அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாகவும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த அனனத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யுமாறும், அதுவரை அவரது சொத்துக்களை வேறு யாரும் பங்கிடாதவாறு தடை அறிவிக்ககோரியும், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜெயலலிதா வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்!!…சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்!!..
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 14, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 14, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.