Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 22, 2016

ஆட்சியை கலைப்பதே நல்லது!” தலைமை இல்லாததை உணரும் தமிழக மக்கள்!


 
தமிழகம் தலைமையை இழந்த இந்த நேரத்தில் தலைமைச் செயலாளர் வீட்டில் நடத்தப்பட்டு வரும் சோதனை அவருக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே சோதனை தான்.
மாநில அரசு கேட்காமலேயே துணை ராணுவத்தை குவித்துள்ளது மத்திய அரசு. ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.
ஆனால் அரசியல் காரணங்களுக்காகவே இதுபோன்ற சோதனைகள் பெரும்பாலான நேரங்களில் நடத்தப்படுகிறது. ஜெயலலிதாவிற்கு உறுதுணையாக இருந்தவர் ராம மோகன ராவ்.
சசிகலாவின் ஆள் என கூறுகின்றனர். ஜெயலலிதா சிறையில் இருந்தபோது, ஜெயலலிதாவிற்கு உறுதுணையாக இருந்தாராம் ராம மோகன ராவ்.  அதே போல் ராம மோகனராவிற்கு எதிராக எழுந்த பல்வேறு புகார்களை ஒடுக்கி அவரை காத்தவர் ஜெயலலிதா.
தற்போதைய சூழ்நிலையில் சசிகலாவிற்கும், முதலமைச்சர் பன்னீர் செல்வத்திற்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மோடிக்கு ஆதரவாக பன்னீர் செல்வம் இருப்பதாகவும், சசிகலாவை ஒடுக்கவே இந்த நடவடிக்கை என கூறப்படும் நிலையில், தமிழகம் இப்போது மீண்டும் ஒரு முறை தலைமை இல்லாததை உணர்ந்துள்ளது.
எனவே ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை நடத்துவது தான் நல்லது என்ற கருத்து மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இந்த செய்தியில் அடங்கியுள்ள கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துக்களாகும். இணைய தளத்தின் கருத்தல்ல

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.