December 27, 2016
ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்திய போது கண்ணீர் விட்டு கதறி அழுத ஓபிஎஸ்- வைரல் வீடியோ
சென்னை: உடல்நலக்குறைவினால் 75 நாட்கள் சிகிச்சை பெற்ற ஜெயலலிதா, கடந்த 5ம் தேதி மரணமடைந்தார். அவருக்கு முதல்வர் ஓபிஎஸ் அஞ்சலி செலுத்திய போது பணிவு காணமல் போய்விட்டதாக பலரும் குற்றம் சாட்டினர்.
ஊடகங்களிலும் செய்தி வெளியானது. சமூக வலைதளங்களிலும் பலரும் பதிவிட்டனர். பதவியேற்ற போது பலரும் கண் கலங்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் முதன் முதலாக மலர்வளையம் வைத்து ஜெயலலிதாவின் பாதத்தில் குனிந்து அஞ்சலி செலுத்திய போது கதறி அழுத காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
ஓ.பி.எஸ் ஆதரவாளர்களும்,சசிகலா நடராஜன் அதிமுக தலைமைப் பொறுப்புக்கு வருவதை விரும்பாத அதிமுக தொண்டர்களும் இந்த வீடியோவை அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.
இவர்தான் உண்மையான விசுவாசி என்று கூறி வருகின்றனர். ஓபிஎஸ் அழுவதைப் பார்த்து பிற அமைச்சர்களும் கண் கலங்கி அமர்ந்துள்ள வீடியோ காட்சி தற்போது வெளியாகி வருகிறது.
தமிழ் தொலைக்காட்சிகளில் இந்த வீடியோ வெளியாகவில்லை. அதே நேரத்தில் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.
தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ் தொலைக்காட்சிகள், ஓ.பன்னீர் செல்வத்தின் அழுகையையும், விசுவாசத்தையும் திட்டமிட்டு மறைத்து விட்டதா?
ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்திய போது கண்ணீர் விட்டு கதறி அழுத ஓபிஎஸ்- வைரல் வீடியோ
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 27, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 27, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.