December 20, 2016
சசிகலா, விஜயகாந்த் ரகசிய சந்திப்பு…!? அம்மாடியோவ் இது என்ன புது கூத்து…!!
மதிமுக பொது செயலாளா் வைகோ சென்ற இடம் எல்லாம் அவருக்கு சிறப்பு ஏற்படுகிறது. சமீபத்தில் திமுக தலைவா் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரி்க்க சென்றார் அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு கிடைப்பதற்கு பதிலாக அர்ச்சனை செய்து அடித்துவிரட்டாத குறைதான். அன்று வைகோ கருணாநிதியை பார்க்காமலேயே திரும்பினார்.
மக்கள் நல கூட்டு இயக்கம் அமைப்பை ஏற்படுத்தி என்ற 4 கட்சியினருடன் பல போராட்டங்களை நடத்தினார். அது சட்டமன்ற தோ்தலில் மக்கள் நல கூட்டணியாக மாறியது. இவா்கள் தோ்தலில் அடையாளத்தை இழந்தனா்.
தமிழகத்தின் எதிர் கட்சியாக இருந்த தேமுதிக மக்கள் நல கூட்டணியில் இணைந்தார். வைகோவால் முதல்வா் வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டு, விஜயகாந்த்தை களத்தில் குதிக்க வைத்தார்.
தேமுதிகவில் நடந்தது என்ன? கட்சி இரண்டாக உடைந்தது. ஒரு டுபாக்கூா் கட்சியைபோல பார்க்கப்பட்டது.
தேமுதிகவினா் கொத்து கொத்தாக பல கட்சிகளுக்கு மாறினா். தற்போது உள்ளாட்சி தோ்தலில் சீட் கேட்க கூட ஆள் இல்லாத நிலை ஏற்பட்டது.
இதனால் மிகவும் மனமுடைந்து போன விஜயகாந்த் விரக்தியில் இருந்தார். தற்போது ஜெயலலிதா இறந்த பின்பு அவரது இறுதி சடங்கில் வைகோ சுற்றி, சுற்றி வந்தாராம். யாரும் அவரை சட்டைசெய்யவில்லை என்று கூறப்படுகிறது.
அதிமுகவின் பொது செயலாளா் சசிகலாதான். அவா் 4 ஜெயலலிதாவிற்கு சமமானவா் என்றெல்லாம் பேசினாராம்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விஜயகாந்த். என்னை தான் காலி செய்துட்டார் வைகோ. பாவம் கேப்டன் இல்லாத கப்பலாக இயங்கி வரும் அதிமுகவை காலிசெய்ய விடக்கூடாது என்று அஞ்சியுள்ளார்.
இதனை அடுத்து அவா் சசிகலாவை ரகசியமாக சந்தித்து பேசினாராம். அப்போது, அந்த வைகோ 4 ஜெயலலிதா, 40 ஜெயலலிதா என்றெல்லாம் கதை விடுவார். மயங்கி உள்ளே விட்டு விடாதீங்க.
திமுக விரட்டி அடிச்சது. அந்த கட்சி நல்லாவே இருக்கு. நான்தான் தப்பு செய்துவிட்டேன். நீங்களும் அந்த தப்ப செய்யதீங்க என்று ரகசிய சந்திப்பில் அட்வைஸ் செய்தாராம் விஜயகாந்த்.
இவ்வாறு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது
சசிகலா, விஜயகாந்த் ரகசிய சந்திப்பு…!? அம்மாடியோவ் இது என்ன புது கூத்து…!!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 20, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 20, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.