Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 23, 2016

வீடு புகுந்து விவசாயியை தாக்கிய திமுக கும்பல்!



ஆற்காடு அருகே வீடு புகுந்து விவசாயி மீது திமுகவை சேர்ந்த கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் ஆற்காட்டை அடுத்த கூராம்பாடி பகுதியை சேர்ந்த லோகய்யன் என்பவர், அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கும் ஆற்காடு தோப்புக்காணா பகுதியை சேர்ந்தவர் தி.மு.க. மாவட்ட பிரதிநிதி கஜாவுடன் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த லோகய்யனை திடீரென கஜா தலைமையிலான ஆறு பேர் கொண்ட கும்பல் கடுமையான ஆயுதங்களை கொண்டு தாக்க தொடங்கியுள்ளது.

இதில் படுகாயமடைந்த லோகய்யன் சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து ஆற்காடு காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.