Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 21, 2016

பன்னீர் ஆட்டம் ஆரம்பம்…! ராம் மோகன் ராவ் வீட்டில் ரெய்டு..! மன்னார்குடிக்கு ஓடிப் போய்விடுங்கள்..!



நேற்று டெல்லி போனார் முதல்வர் பன்னீர். அவர் என்ன பேசுகிறார்  என்று உளவு பார்க்க தம்பிதுரையை கூடவே அனுப்பியது சசி தரப்பு. பிரதமரை பார்க்க உள்ளே சென்ற முதல்வர்  தம்பிதுரையை வெளியே நில்லுங்கள் என்று சொல்ல அதிர்ந்து போனார் தம்பிதுரை.
உள்ளே சென்ற பன்னீர் தனது அத்தனை ஆதங்கத்தையும் கொட்டித்தீர்த்தார் போல. அத்தனை உண்மைகளையும் போட்டு உடைத்தார் போல.
அதுதானே  பிரதமர் எதிர்பார்த்தது. சசி குடும்பத்தின் முப்பது வருடத்தின் கதையும் அங்கு பேசவும் ஆவணமாகவும் கொடுக்கப்பட்டது என்கிறார்கள்.
பிரதமர் கடும் கோபத்துடன் இறுக்கமாகவே இருந்தார் என்கிறார்கள். ஜெ.இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பிரதமர் பன்னீரை நெஞ்சோடு அணைத்த போதே அதற்கு ஆயிரம் அர்த்தங்கள் புரிந்தது.
இப்போது டெல்லியில் பன்னீர் சந்தித்த அடுத்த நாளே தலைமைச்செயலளார்  ராம் மோகன் ராவ் வீட்டில் வருமானவரி சோதனை ஆரம்பம்.
இது தொடக்கம் தான் அடுத்து பெரும் தலைகள் எல்லாம் மாட்டி சீரழியப் போகிறது என்று சிரிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
முதல்வர் பன்னீர் எப்போதுமே அம்மாவின் விசுவாசி, செல்லப் பிள்ளை. அவரின் இடத்திற்கு சம்பந்தமே இல்லாத ஒரு குடும்பத்தை உட்கார வைக்க அவர் மனது ஒப்புகொள்ளாது.
மன்னார்குடி ஆட்களின் சதிகளை இன்னமும் முதல்வர் அனுமதிக்கவே மாட்டார்.
ராம் மோகன் ராவ் வீடு தொடர்ந்து அடுத்து யாரோ என்று சசி தரப்பு ஆடிப்போய் இருக்கிறது.
வேட்டை..வேட்டை..வேட்டைடா..

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.