தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் டியூஷன் மாணவிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து ஆபாசமாக எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள் அடங்கிய மெமரி கார்டுகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
பாலக்கோட்டைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலக்கோடு மற்றும் தர்மபுரி பகுதிகளில் டியூசன் சென்டர் நடத்தி வந்தார். இவரிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு டியூசன் படித்த பிளஸ்–2 மாணவி ஒருவரை மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் அண்மையில் பரவியதை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் கடந்த 4ம் தேதி சிவக்குமார் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தன்னிடம் டியூசன் படித்த 30 மாணவிகளை இதே பாணியில் பாலியல் தொந்தரவு செய்ததாகத் தகவல் வெளியானது.
மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய சிவகுமாரின் 2 நண்பர்களையும் போலீசார் கைது செய்தனர். இதனிடையே, சிவக்குமாரின் வீடு, டியூசன் சென்டர் ஆகிய இடங்களில் போலீசார் நடத்திய சோதனைகளில், மறைத்து வைக்கப்பட்டிருந்த மெமரி கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதில், மாணவிகளை, சிவக்குமார் செல்போனில் எடுத்த சில வீடியோ காட்சிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவகுமாரின் நண்பர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.