கோவை: புத்தாண்டை முன்னிட்டுசசிகலாவின் படம் அச்சிடப்பட்ட பாக்கெட் கார்டுகள், காலண்டர்களுக்கு கோவை கடைகளில் ஆர்டர்கள் குவியத் தொடங்கியுள்ளன.
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மறைவை அடுத்து கட்சியின் பொதுச்செயலாளராக ஜெயலலிதாவின் தோழி சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என்ற கருத்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்க சசிகலாவுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் அவரது ஆதரவாளர்கள் போய்ஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். ஒருதரப்பினர் சசிகலாவுக்கு ஆதரவும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே சசிகலாவின் போஸ்டர்களில் கருப்பு மை உள்ளிட்டவற்றையும் பூசும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
விடுகின்றனர்
அதே நேரத்தில் முதல்வர் பன்னீர்செல்வம் முதல் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் என பலரும் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் 2017ம் ஆண்டு புத்தாண்டு காலண்டர்களின் வடிவமைப்பில் கூட சசிகலாவை முன் நிறுத்தி தாயாரிக்க சொல்லி கடைகளில் ஆர்டர் அளித்து வருகின்றனர் அதிமுகவினர். கோவை மாவட்டத்தில் சசிகலா படம் போட்ட பாக்கெட் கார்டுகளுக்கு ஆர்டர்கள் குவிந்து வருகிறது. மேலும் புத்தாண்டையொட்டி சசிகலா படம் போட்ட காலண்டர்களுக்கும் அதிமுகவினர் ஆர்டர் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.