December 20, 2016
சசிகலா முதல்வராக பொறுப்பேற்பதை யாராலும் தடுக்க முடியாது!!… சீமான் பேட்டி!!..
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் டெல்லி பாஜகவினரின் கருத்தும், தமிழக பாஜகவினர் கருத்தும் முரணாக உள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்பதில் நம்பிக்கை இல்லை. இதனால் தமிழர்களின் பண்பாடான ஜல்லிக்கட்டை தடையை மீறி நடத்துவோம் என கூறினார்.
மேலும்,ஜெயலலிதா மரணத்தில் பலருக்கும் ஏமாற்றம் தான் மிஞ்சியது. அதிமுகவின் அடுத்த பொது செயலாளர் யார் என்பதை பொது குழு தான் முடிவு செய்ய வேண்டும். தற்போது சென்னையின் ஆர்.கே நகர் தொகுதி காலியாக உள்ள நிலையில், அங்கு சசிகலா போட்டியிட்டு வெற்றி பெற்றால் அவர் தமிழக முதல்வராக கூட வாய்ப்புள்ளது.
அவர் முதலமைச்சராக பொறுப்பேற்பதை, அதிமுக கட்சியினர் விரும்புவதால் அதை யாரும் தடுக்க முடியாது என்று சீமான் கூறியுள்ளார்.
சசிகலா முதல்வராக பொறுப்பேற்பதை யாராலும் தடுக்க முடியாது!!… சீமான் பேட்டி!!..
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 20, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 20, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.