December 11, 2016
விமானத்தில் என் இடுப்பின் மீது கை வைத்து சில்மிஷம் - இந்தி நடிகை பரபரப்பு புகார்
விமானத்தில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன் என்று இந்தி நடிகை புகார் கூறியுள்ளார். இந்தியில் வித்யாபாலன் நடித்த பரினீதா, ஐஸ்வர்யா ராய் நடித்த பெங்காலி படமான, ‘’சோக்கர் பாலி’’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் டினா தத்தா. பெங்காலி டி.வி. சீரியல்களிலும் நடித்துள்ளார். இப்போதும் நடித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை இவர், மும்பையில் இருந்து ராஜ்கோட் விமானம் ஒன்றில் பயணம் செய்துள்ளார். விமானத்துக்குள் சென்று சீட்டில் அமர்ந்ததுமே, பின் சீட்டில் இருந்து ஒரு கை இடுப்பின் மேல் படுவதை உணர்ந்தார். திடீரென அதிர்ச்சியடைந்த டினா, எழுந்து நின்று திரும்பிப் பார்த்தார்.
அப்போது பின் சீட்டில் இருந்த நபர் முகத்தை திருப்பிக் கொண்டார். தெரியாமல் பட்டிருக்கும் என்று நினைத்து மீண்டும் சீட்டில் அமர்ந்தபோது, அதே நபர் மீண்டும் அத்துமீறியுள்ளார். இதனால் அவர் பின்பக்க நபரை திரும்பி பார்த்தபோது, ‘’மன்னித்துக் கொள்ளுங்கள். தெரியாமல் கை பட்டுவிட்டது’’ என்று கூறியுள்ளார்.
இதையடுத்து விமானப்பணிப் பெண்களிடம் புகார் சொன்னார் டினா. ஆனால் அவர்கள், தெரியாமல் கை மேலே படுவது சகஜம்தான் என்று சொல்லிவிட்டு, பின்னால் இருந்தவரை வேறு இடத்தில் மாறி உட்காரச் சொன்னார்கள். டினா விடவில்லை. அவரை கீழே இறக்குங்கள் என்றார். அப்படியென்றால் நீங்களும் இறங்கி புகார் கொடுத்துவிட்டு வாருங்கள் என்றனர் விமானப் பணிப்பெண்கள்.
இதுபற்றி டினா கூறும்போது, ‘’கை தவறுதலாகப் படுவதற்கும் பின் சீட்டில் இருந்து கையை நுழைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அந்த நபரின் பெயர் ராஜேஷ் என தெரிய வந்தது. அவரை கீழே இறக்குங்கள் என்றேன். நானும் இறங்கி புகார் கொடுக்க வேண்டும் என்றனர். இப்படியொரு சம்பவம் நடந்து நான் அலறிக் கொண்டிருந்தபோது, ஒரே ஒரு குடும்பத்தைத் தவிர, வேறு யாரும் எனக்கு ஆதரவாகப் பேசவில்லை. இது வருத்தமாக இருந்தது’’ என்றார். இது பற்றி அந்த விமான நிறுவனம் கூறும்போது, ‘’டினா விமானப் பணி பெண்களிடம் புகார் கூறியது உண்மை தான். பாதுகாப்பு துறையினர் விசாரிக்கின்றனர்’’ என்றது.
நன்றி: தினகரன்
விமானத்தில் என் இடுப்பின் மீது கை வைத்து சில்மிஷம் - இந்தி நடிகை பரபரப்பு புகார்
Reviewed by மறத்தமிழன்
on
December 11, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
December 11, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.