Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 9, 2016

கடன் தொல்லையால் மனைவி - மகள்களை கொலை செய்தவர் தற்கொலை முயற்சி



தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள புதுப்பட்டியில் கடன் தொல்லையால் இரு மகள்கள் மற்றும் மனைவியை கொலை செய்து விட்டு வியாபாரி தற்கொலைக்கு முயன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே கோகிலாபுரத்தை சேர்ந்த முருகன், பர்னிச்சர் பொருட்களை வாங்கி தவணை முறையில் விற்பனை செய்து வந்தார். இவருக்கு, தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், கடன் தொல்லை அதிகரித்து குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பள்ளியில் இருந்து வந்த தனது இரு மகள்கள் மற்றும் மனைவியை முருகன் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக சகோதரருக்கு தொலைபேசியில் தெரிவித்த அவர், தனது கழுத்தையும் அறுத்து கொண்டார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த முருகனின் சகோதரர், அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த முருகனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.