Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 29, 2016

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய விவசாயி!



ஈரோடு மாவட்டத்தில் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் விவசாயிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி  ஈரோடு மாவட்ட மகிளா நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கியுள்ளது.
ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த பனஹள்ளியை சேர்ந்தவர் சிவக்குமார் விவசாயியான இவருக்கும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாக்யா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் பாக்யா பிரசவத்திற்கு தனது தாயார் வீட்டிற்கு சென்றபோது சிவக்குமாருக்கும் ஒரு பெண்ணுடன் கள்ள தொடர்பு ஏற்பட்டு உள்ளது.இதனால் மனம் உடைந்த பாக்யா கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி திருநாவுக்கரவு வழக்கில் குற்றம் சாட்டபட்ட விவசாயி சிவக்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும்  10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பத்தாயிரம் அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்திரவிட்டார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.