December 27, 2016
பணத்திற்காக கடத்தப்பட்ட சிறுமி கொடூர கொலை: உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய இரண்டு இளம் வாலிபர்கள் – அதிர்ச்சி செய்தி
மூன்று வயதுச் சிறுமியை 16 வயதே நிரம்பிய இருவர் பணத்திற்கு ஆசைப்பட்டு கொலை செய்த சம்பவம் இந்தியா – மகாராஷ்ட்டிர மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 5-ஆம் திகதியிலிருந்து தங்களது 3 வயது பெண் குழந்தையை காணவில்லை என காவல் நிலையத்தில் குழந்தையின் பெற்றோர் புகார் அளித்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர். மும்பை புறநகரான காஜிபுரா பகுதியில் சனிக்கிழமை இரவு அந்தக் குழந்தையின் சடலத்தை கண்டெடுத்தனர்.
விசாரணையில், குழந்தையின் வீட்டுக்கு அருகில் வசித்து வந்த 16 வயது இளைஞர் ஒருவரும், அவரது நண்பரும் இணைந்து அந்தக் குழந்தையை கடத்திச் சென்று, பின்னர் கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து இருவரும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சிறுமியைக் கடத்திய இளைஞர்கள், அவளை விடுவிக்க 1 கோடி ரூபாய் கேட்டு சிறுமியின் பெற்றோருக்கு தொலைபேசியில் பேசியுள்ளனர்.
பெற்றோர் தரப்பில் இருந்து அவ்வளவு பெரிய தொகையை தங்களால் தர இயலாது என்று கூறியுள்ளனர்.
தொடர்ந்து பேரம் பேசிய இளைஞர்கள் இறுதியாக 28 லட்சம் ரூபாய் பெற ஒத்துக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து அந்த பணத்தை கல்வா பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே போட்டு விட்டு செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் பெற்றோர்கள் காவல்துறையினரோடு அந்த இடத்துக்கு சென்றனர் பொலிஸாரை கண்ட இளைஞர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டனர்.
காவல்துறையினர் அந்த சிறுமியின் வீடு அமைந்துள்ள பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.
சந்தேகத்தின் பேரில் 10 பேரை பிடித்து விசாரித்ததில் அந்த இளைஞர்கள் சிறுமியை கடத்தியதை ஒப்புக்கொண்டனர்.
இளைஞர்கள் சிறுமியை கடத்த குளோரோபார்ம்மை கொடுத்துள்ளனர்.அப்போது அதன் அளவு அதிகமான காரணத்தால் சிறுமியின் மூக்கில் இருந்து இரத்தம் வந்துள்ளது இதையடுத்து சிறுமி மயக்கமடைந்தாள்.
இந்நிலையில் செய்வது அறியாது அந்த இளைஞர்கள் செல்போன் வயரை கொண்டு குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு உடலை துண்டு, துண்டாக வெட்டி சடலத்தை அவர்களது குடியிருப்புக்கு அருகில் பொலித்தீன் பையில் சுற்றி மறைத்து வைத்துள்ளனர்.
அவர்கள் அளித்த தகவலின் படி சிறுமியின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பணத்திற்காக கடத்தப்பட்ட சிறுமி கொடூர கொலை: உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய இரண்டு இளம் வாலிபர்கள் – அதிர்ச்சி செய்தி
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 27, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 27, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.