December 23, 2016
தொடரும் அவலம் : இறந்த தந்தையின் உடலை தோளில் சுமந்து சென்ற மகன்!
தனா மாஜி என்பவர் வாகனம் ஏதும் ஏற்பாடு செய்ய இயலாத நிலையில் தன் மனைவியின் உடலை தோளில் சுமந்து கொண்டு சென்று இறுதிச்சடங்குகளை செய்தார் என்ற செய்தி மறைவதற்குள் மற்றொரு துயரம் ஒடிஷா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
கொதசகி எனும் கிராமத்தை சேர்ந்த சரத் பாரிக் எனும் இளைஞர் இறந்த தன் தந்தையின் உடலை தோளில் சுமந்து கொண்டு சென்றுள்ளார். சமூக சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த சரத் பாரிக்கின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் அல்லது வாகனம் ஏதும் கிடைக்கவில்லை. உடலை ஏற்றிச்செல்ல வாகனம் ஏதும் இல்லை என்று மருத்துவமனையில் உள்ளவர்கள் கூறியதை அடுத்து, தனது தந்தையின் உடலை தோளில் சுமந்து கொண்டு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்றுள்ளார். பின்னர் அவருக்கு அவரது உறவினர் ஒருவர் சுமந்து செல்ல உதவி செய்துள்ளார்.
செல்லும் வழியில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல உதவி செய்துள்ளார். இறந்தவரின் உடல் மருத்துவமனை ஹாலில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த மருத்துவர் அஜித் தாஸ், இந்த சம்பவம் குறித்து தனக்கு தெரியாது எனவும், தான் ஒரு மீட்டிங்கில் இருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்வதற்கு மருத்துவமனையில் எந்த வசதியும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடரும் அவலம் : இறந்த தந்தையின் உடலை தோளில் சுமந்து சென்ற மகன்!
Reviewed by மறத்தமிழன்
on
December 23, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
December 23, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.